மேலும் அறிய

Trisha: அருவருப்பாக உள்ளது! அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை - நடிகை திரிஷா அறிவிப்பு

அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூயின் பேச்சு அருவருப்பாக உள்ளது என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரிஷா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஏ.வி.ராஜூ. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் என்று இவர் நேற்று நிருபர்கள் முன்பு கூறிய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட நடவடிக்கை:

குறிப்பாக, தங்க வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், நடிகையும் திரிஷாவையும் அவர் தொடர்புபடுத்தி அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், நடிகை திரிஷா இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்ப திரும்பப் பார்ப்பது அருவருப்பானது. எனது தரப்பில் இருந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

கூவத்தூர் விவகாரம்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் திரிஷா குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பேசியிருப்பத பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும், கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தவும் ஏ.வி. ராஜூவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்குவதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

ஏ.வி. ராஜூ திரிஷா மட்டுமின்றி முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ், வெங்கடாச்சலம் ஆகியோர் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கருணாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக கூவத்தூரில் சசிகலா ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அப்போது தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கேதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தககது.

மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் திரிஷா குறித்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: Karthigai Deepam: தீபாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு‌.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

மேலும் படிக்க: Manisha Koirala: மனிஷா கொய்ராலா நியாபகம் இருக்கா? - அதிர்ச்சியளிக்கும் அவரின் தற்போதைய நிலை!

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget