கரூர் மாயனூர் கதவணைக்கு 1.62 லட்சம் கனஅடி நீர் வருகை - விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் காவிரி பாசன வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் காவிரி பாசன சிறுகுறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1.62 லட்சம் கன அடியாக அதிகரித்தது. மாயனூரில் 02.00 மில்லி மீட்டர் மழை கொட்டியது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 62 ஆயிரத்து, 170 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து, 950 கனஅடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் நான்கு வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் காவிரி பாசன வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் காவிரி பாசன சிறுகுறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி அணை நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,671 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 2,925 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 959 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம் 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 13.39 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 33.461 கன அடி ஆக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை நிலவரம்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.9 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.17 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு -36.10
கரூர்- 1.2 மில்லி மீட்டர், அரவாக்குறிச்சி- 06.00 மில்லி மீட்டர், அனைபாளையம்- 04.03 மில்லி மீட்டர், குளித்தலை 01.06 மில்லி மீட்டர், தோகமலை 01.04 மில்லி மீட்டர், மாயனூர் 02.0 மில்லி மீட்டர், பஞ்சபட்டி 15..04 மில்லி மீட்டர், மைலம்பட்டி 03.00 மில்லி மீட்டர், ஆகிய அளவுகளில் மழை பெய்தது, மாவட்டம் முழுவதும் சராசரியாக 36.10 மில்லிமீட்டர் மழை பெய்தது.
அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றம் - கரூர் அடுத்த பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் 14,570 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கரூர் அமராவதி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பனையில் நீர் மட்டம் 92 சென்டிமீட்டர் உயர்ந்து தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 14.570 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரிய ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் பொது மக்களுக்கு வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம், கரையோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது எனவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.