கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக உயர்வு
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 15 ஆயிரத்து, 850 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 820 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 13 ஆயிரத்து, 761 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 670 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 15 ஆயிரத்து, 850 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 820 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 419 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 575 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 243 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், 364 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 77.89 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.80 கனஅடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 46 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 18.36 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 64 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பஞ்ச பட்டியல் 120 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது. வட தமிழகத்தின் மேல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் 14 வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு 10:30 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. கரூர் நகரில் பெய்த மழை காரணமாக சின்ன குளத்துப்பாளையம், பசுபதிபாளையம், ரயில்வே குகை வழி பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதி பட்டனர். காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.,): கரூர், 2.4, அரவக்குறிச்சி, 7.0, அணைப்பாளையம், 0.0, க.பரமத்தி, 0, குளித்தலை, 0, தோகைமலை, 0, கிருஷ்ணராயபுரம், 13, மாயனூர், 0, பஞ்சப்பட்டி, 37, கடவூர், 6, பாலவிடுதி, 9.4, மைலம்பட்டி, 14 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 6.40 மி.மீ., மழை பதிவானது.