மாயனூர் கதவணைக்கு 1.58 லட்சம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பு
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 330 கனஅடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 1.58 லட்சம் கனஅடி, அமராவதியில் 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 55 ஆயிரத்து, 573 கன அடியாக அடி தண்ணீர் வந்தது. மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 550 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 330 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,671 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,925 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 87.41 அடியாக இருந்தது. ஆனால், அமராவதி துணை ஆறுகளில் கனமழை காரணமாக கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 11,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.17 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், காலை, 8:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் கரூரில், 1.2 மில்லி மீட்டரும்., அரவக்குறிச்சி, 6; அணைப்பாளையம், 4.3; குளித்தலை 1; தோகைமலை, 1.4; கிருஷ்ணராயபுரம், 1.8; மாயனூர் 2; பஞ்சம்பட்டியில், 15.4; மைலம்பட்டி, 3 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 3.01 மில்லி மீட்டர்., மழை பதிவானது.
கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்.
அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீராலும், கரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை நீராலும் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்நிலையில் அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி 3,051 கன அடி தண்ணீர் வந்தது. இதனை அடுத்து அமராவதி அணையில் இருந்து 3,421 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதே போல் காலை 6:00 மணி நிலவரப்படி 2,671 கனஅடி நீர் அணைக்கு வந்தது. அணையில் இருந்து 2,925 கன அடி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வந்த மழை நீரும் சேர்ந்து கரூர் செட்டிபாளையம் கதவணையை தாண்டி கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. இதனால் காலை 14,570 கன அடி தண்ணீர் ஆண்டாங்கோவில தடுப்பணைக்கு வந்தது.
இதனால் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக கரூர் அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. இந்நிலையில் 90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6:00 மணி நிலவரப்படி 87.41 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 3,813.39 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.