மேலும் அறிய
G20 செயற்கைக்கோள் பருவநிலை மாற்றம் ஆய்வு, 2035-ல் இந்திய விண்வெளி நிலையம் - இஸ்ரோ தலைவர் தகவல் !
இந்தியர்களால் உருவாக்கப்படும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் பேட்டி
Source : whatsapp
G-20 செயற்கை கோள் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறது, 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என மதுரையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி.
இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
மதுரை ஒத்தக்கடையில் தமிழக அரசு வேளாண்மை பல்கலைக்கழகம் 60 ஆண்டுகளை கடந்த நிலையில் வைர விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில் "இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது. மேலும், உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏற்றுமதி செய்கிறோம். LVM 3 தொலை தொடர்பு செயற்கை கோல் ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுத்தப்பட்டு வருகிறது. இன்னும் செயற்கை கோல் ஏவும் தேதி முடிவு செய்யவில்லை. சந்திராயன் 4, சந்திரயான் 5 மற்றும் கிரகயான் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். குலசேகர பட்டணத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 2027 மார்ச் மாதத்திற்க்குள் ராக்கெட் அனுப்பி வைக்கப்படும். 2024 ஜனவரி 6 ல் ஆதித்யா ராக்கெட் ஏவப்பட்டது. அதில் இருந்து 20 டெராபிட் டேட்டா வந்துள்ளது. இந்த டேட்டா உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கு பயன்படும்.
விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள்
இந்தியர்களால் உருவாக்கப்படும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் 5 கட்டங்களாக நடத்த இருக்கிறோம். G-20 செயற்கை கோள் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறது. 2027 க்குள் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு முன்னதாக மனிதர்கள் அல்லாத 3 ஏவுகணை அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம். இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் சுபான் ஷீ சுக்லாவின் விண்வெளி ஆராய்ச்சியை பயன்படுத்தி வருகிறோம். விண்வெளியில் விதை, நெல் முளைக்க வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. அதில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. விண்வெளியின் தேவைகள் அதிகரித்ததால் இஸ்ரோவுடன் புதிய நிறுவனங்கள் இணைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டு, தற்போது 330 புதிய நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைத்து செயற்கை கோள் தயாரிப்பு, டேட்டா தயாரித்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரோ புதிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதால் இன்னும் 5 ஆண்டுகளில் இஸ்ரோ வளர்ச்சியடைவதுடன் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்ற நிறைய திட்டங்கள் உள்ளது, விண்வெளியில் ஆராய்ச்சி முடிவுற்று சுற்றித் திரியும் செயற்கைக்கோள்களில் எரிபொருளை நிரப்பி மீண்டும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கைகள், விண்ணில் தொழில்நுட்ப கோளாறால் உள்ள செயற்கைக்கோள்களை சரி செய்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை, பயன்பாடு முடிந்த செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் இருந்து 400 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலை நிறுத்தலாம், மேலும் ஆராய்ச்சிகள் நிறைவு பெற்ற செயற்கைக்கோள்களில் மீண்டும் பூமிக்கு கொண்டு வரலாம் இப்படி நிறைய திட்டங்கள் உள்ளது, விண்வெளியில் குப்பைகளை குறைப்பதற்க்காக ஆய்வுகள் நடத்தி வருகிறோம், இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் விண்வெளி குப்பைகள் குறைப்பதற்க்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது" என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















