மேலும் அறிய

ரஜினியின் 75வது பிறந்தநாள்: திருமங்கலத்தில் ரசிகரின் பிரம்மாண்ட கொண்டாட்டம்.. ரஜினி சிலைக்கு பூஜை !

பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து இதனைத் தொடர்ந்து ரஜினியின்  சிலைக்கு தீபாராதனை ரஜினி சிலைக்கு காட்டப்பட்டது.

திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் ரஜினியின் 75-வது பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாடிய ரஜினியின் தீவிர பக்தர்.

ரஜினியி கோயில்
 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் முன்னாள் துணை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கார்த்திக். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் சிறுவயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வராகங்களில் இருந்து தற்போது புதிதாக வெளியான படத்தின் போஸ்டர் வரை கார்த்தி தனது வீட்டில் ரஜினிக்கு என்று ஒரு கோவில் போன்ற அமைப்பை தயார் செய்து, அதில் ரஜினியின் பல்வேறு புகைப்படம் வைத்து வழிபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் 73 வது பிறந்தநாள் முதல் மூன்றடி உயரம் 250 கிலோ கருங்கல்லில் சிலை அமைத்து அன்று முதல் இன்று வரை வழிபட்டு வருகிறார்.
 
ரஜினியின் 75-வது பவளவிழா
 
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஜினி சிலைக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வருகிறார். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு  ரஜினி சிலையை குலதெய்வமாக வழிபடும் செய்தார் கார்த்தி.
நாளை ரஜினியின் 75-வது பவளவிழா பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றை அடி உயரம் 3 கிலோ கேக் வெட்டியும், உற்சவர் ரஜினி சிலைக்கு நாக கிரீடம் சாத்தியும், மேலும் மூலவர் மற்றும் உற்சவர் ரஜினி சிலைக்கு உத்தரகோசமங்கையில் இருந்து வாங்கப்பட்ட காசு மாலையை சாத்தியும் வழிபாடு நடத்தினார். இது மட்டுமல்லாது ரஜினியின் 75 ஆவது பிறந்தநாள் என்பதால் சுமார் 7500 ரஜினி படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ரஜினிக்கு 75 மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்துக்களும் வைக்கப்பட்டுள்ளது, இதோடு பழைய ரஜினி பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்கள் வைத்து 75 என்ற நம்பராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் glue and glitter ல் ரஜினியின் படம் அனைத்தும் ரஜினியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடிய ரஜினி ரசிகர் கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 
 
ரஜினியின்  சிலைக்கு தீபாராதனை
 
இதனை தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து இதனைத் தொடர்ந்து ரஜினியின்  சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டு குடும்பத்தினரோடு ரஜினியை தெய்வமாக வழிபட்டனர். இந்தியாவிலேயே நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும், தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்தியின் செயல் வினோதமானதே. மேலும் தெய்வத்திற்கு அமைப்பது போன்று திருவாச்சியும் நாக கிரீடமும் விளக்குகளும் கோவில் மணியும் அமைத்து வழிபடுவது, மேலும் ஒரு வினோதமே, இதனை பலரும் விமர்சனம் செய்தாலும் நான் வணங்கும் தெய்வம் ரஜினிகாந்த் என்று அவரது குடும்பத்தினர் பெருமிதம் கொள்கின்றனர்.                                                                                          

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget