தேர்தல் எப்பொழுது வந்தாலும் சந்திக்க தயார் - பாஜக தலைவர் முருகன்
எப்பொழுது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் முருகன் காஞ்சிபுரத்தில் பேட்டியளித்துள்ளார்.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள குருசேத்திரப் பள்ளியில் இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏழு எளியோருக்கு குருநாகல நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஏழை மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மளிகை பொருட்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த இயல் முருகன் கூறுகையில், தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரை மு க ஸ்டாலின் புகழ்பாடும் உரையாகவே உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர் மத்தியிலேயே மாணவர்களின் மன உறுதியை குலைக்கும் செயலை திராவிட முன்னேற்றக் கழகம் செய்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி எப்பொழுது தேர்தல் வந்தாலும் தயாராக உள்ளது. தற்போது இருக்கும் கூட்டணி இருந்து கொண்டுதான் வருகிறோம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டு வருகிறது மாநில நிதி அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கொடுத்தது. திமுக அதனை பின்பற்றினால் பெட்ரோல் டீசல் விலை குறையும். அதிமுகவில் சசிகலா விவகாரத்தில் அது உள்கட்சி பிரச்சனை அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.