மேலும் அறிய

காளையார் கோவில்  பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல்,குறியீடுகள்  கண்டெடுப்பு..

”மக்கள் பழங்காலத்திலிருந்தே குறியீடுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் தொழில் சார்ந்தும் கருத்தை அறிவிப்பதற்காகவும் குறியீடுகள் பயன்பாட்டில் உள்ளன”.

காளையார் கோவில்  பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல்  குறியீடுகளை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர்,புலவர் கா.காளிராசா,கள ஆய்வாளர் கா. சரவணன், தலைவர் நா.சுந்தரராஜன்,செயலர்  இரா.நரசிம்மன் ஆகியோர் மேற்கொண்ட  மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுத்துள்ளனர்.
 
இது குறித்து கா.காளிராசா தெரிவித்ததாவது,” சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புறநானூற்று பாடலில் இடம்பெற்ற சங்க இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன்கோட்டை என்னும் பகுதி உள்ளது. புலவர் ஐயூர் மூலங்கிழார் புறநானூற்றுப் பாடலில் கோட்டையின் சிறப்பையும் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனான வேங்கை மார்பனை பற்றியும் கோட்டையை வெற்றி கண்ட பாண்டியன் உக்கிரப் பெருவழுதியை பற்றியும் சிறப்பித்து கூறுகிறார். அவ்வாறான இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை ஆழமான அகழி மற்றும் நடுவில் நீராவி குளம் ஆகிய சங்க இலக்கிய கோட்டையின் இலக்கண அமைப்போடு அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டை மேடு 37 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அமைந்துள்ளது. இன்றும் இக்கோட்டையின் கிழக்கு பகுதியில் காவல் தெய்வமாக முனீஸ்வரர் கோவிலும் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் வழிபாட்டில் உள்ளன.

காளையார் கோவில்  பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல்,குறியீடுகள்  கண்டெடுப்பு..
சங்க கால எச்சங்கள்.
 
எங்கள் குழு தொடர்ந்து இப்பகுதியில்  மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அதில் சங்க கால செங்கல் எச்சங்கள், கூரை ஓட்டு எச்சங்கள்,மண்ணால் கல்லால் ஆன உருண்டைகள். வட்டச் சில்லுகள்  இவற்றிற்கெல்லாம் முதன்மையாய் மோசிதபன் என்னும்  தமிழி எழுத்தில் பெயர் பொறித்த பானையோடு ஆகியன கிடைக்கப்பெற்றுள்ளன.
 
பானை ஓட்டு கீறல்கள்  குறியீடுகள்.
 
தற்பொழுது பானை ஓட்டில் கீறல்கள்  குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன.  இதில் ஒரு குறியீடு ஆங்கில எழுத்தில் இசட் (z) போல் உள்ளது. மற்ற ஒன்று முக்கோண வடிவில் கீழே கால்கள் வரையப்பட்டதைப் போல் உள்ளது. மற்றொரு குறியீடு மீன் அல்லது வில்லம்பின் முனை போன்று காணப்படுகிறது. பொதுவாக குறியீடுகள் சிந்து சமவெளி அகழாய்வு முதல் அனைத்து இடங்களிலுமே கிடைக்கின்றன இவை மொழிக்கு முன்னதாக குறியீட்டின் வழி கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

காளையார் கோவில்  பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல்,குறியீடுகள்  கண்டெடுப்பு..
 
தமிழி எழுத்திற்கு முந்திய குறியீடுகள்.
 
தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் களஆய்வு குழிகளில் முதல் அடுக்குகளில் தமிழிஎழுத்துக்களும் அதற்கு பின்னதான அடுக்குகளில் குறியீடுகளும் கிடைக்கப் பெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் இதன் வழி தமிழி எழுத்திற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இக் குறியீடுகள் கருதப்படுகின்றன. இங்கு கிடைத்துள்ள குறியீடுகள் மற்ற அகழாய்வுத் தலங்களிலும் கிடைத்திருப்பது ஒத்த காலத்தை உறுதிப்படுத்துகிறது.
 
படுக்கை பாயின் வடிவமைப்பைக் கொண்ட பானை ஓடு.
 
அழுத்தும் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி அழகான வேலைப் பாடுடைய பானைகள் மற்றும் பெரிய அளவிலான பானைகளை வடிவமைத்துள்ளனர். ஒரு பானை ஓட்டின் மேற்பகுதியில் பாயை விரித்து வைத்தால் காணப்படுவதை போன்ற வடிவமைப்புடைய ஓடு ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறான ஓடுகள் தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுக்க கிடைத்துள்ளன  என்பது இத் தொழில் நுட்பம்  பரவலாக இருந்ததை அறிய உதவுகிறது.
 
இன்றும் பயன்பாட்டில் குறியீடுகள்.
 
மக்கள் பழங்காலத்திலிருந்தே குறியீடுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் தொழில் சார்ந்தும் கருத்தை அறிவிப்பதற்காகவும் குறியீடுகள் பயன்பாட்டில் உள்ளன. சலவைத் தொழில் உள்ளிட்டதொழில்களிலும் போக்குவரத்து அறிவிப்பு உள்ளிட்டவைகளிலும் குறியீடுகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

காளையார் கோவில்  பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல்,குறியீடுகள்  கண்டெடுப்பு..
 
தொடர்ச்சியாக கிடைக்கும் தொல்லியல் எச்சங்கள்.
 
இக்கோட்டை மேட்டில் சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது மேற்கொள்ளும் மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன.
 
இது குறித்து தொல்லியல் துறை அமைச்சர்  மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களிடம் வழங்கிய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தொல்லியல் அலுவலரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அளித்த அறிக்கையின் படி முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற தகவல் சிவகங்கை தொல் நடைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
Embed widget