மேலும் அறிய

எங்க தலைவரை திமுக மிரட்டியதா?.. ஆதவ் பேச்சால் சர்ச்சை.. அடித்துக்கொண்ட விஜய் - ரஜினி ரசிகர்கள்!

எம்ஜிஆருக்கு பிறகு அரசியலில் உள்ள சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால் திமுக பல மிரட்டல்களை கொடுத்து அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் என ஆதவ் அர்ஜூனா கூறினார்.

அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நினைத்த ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாநில அரசை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “எம்ஜிஆருக்கு பிறகு அரசியலில் உள்ள சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால் திமுக பல மிரட்டல்களை கொடுத்து அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில் இன்றைக்கு திமுக குடும்பத்தின் ரெட் ஜெயன்ட் பேனரில் அவர் படம் நடித்து வருகிறார். அவர் மேல் விமர்சனம் கிடையாது. அந்த மன வலிமை நம் தலைவர் விஜயிடம் உள்ளது. தன்னை திட்டிக்கொண்டே இருக்கும்போதும், அழுத்தம் கொடுக்கும்போதும் பயந்துக்கொண்டு வீட்டுக்குள் உட்காரவில்லை. தமிழ்நாட்டில் மாற்றம் உருவாக வேண்டும் என சொன்ன தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன் என எல்லாரும் திமுக கூட்டணியில் உள்ளனர். தமிழ்நாட்டில் மிரட்ட முடியாத, விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே ஆள் விஜய் மட்டும் தான்” என தெரிவித்தார். அவரின் கருத்து ரஜினி ரசிகர்களிடையே கடுமையான கோபத்தை உண்டாக்கியது.

ரஜினி மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை

உடனடியாக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட செயலாளரான சோளிங்கர் ரவி வெளியிட்ட பதிவில், “ரஜினிகாந்த்  மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே... கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார்.

மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும். பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்” என கண்டனத்தை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய் ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் கடுமையான வார்த்தை மோதல் உருவாகியுள்ளது. 

சாட்டை துரைமுருகன் பதிவு

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வெளியிட்ட பதிவில், “தன்னை நம்பிய ரசிகர்களை மனதில் வைத்து அரசியல் பிரவேசத்தில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே! அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி அவர்களை அரசியல்படுத்தாமல் இரத்தம் உறிஞ்சும் அட்டை போலப் பயன்படுத்தும் பக்காமாஸ் கும்பலுக்கு ரஜினிகாந்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.

தன்னுடைய ரஜினிகாந்த் வெறுப்பை ஆதவ் அர்ஜுனாவை வைத்துப் பேச வைத்திருக்கிறார் பக்காமாஸ். ரஜினிகாந்த் அரசியல் வருகையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போதும் அவர் அரசியல் நிலைப்பாடுகள் மீது முரண்கள் உண்டு; ஆனால் தன் கருத்தைச் சொல்வதில் துணிச்சலானவர் ரஜினிகாந்த். ஜெயலலிதா அம்மையார் உச்சத்தில் இருந்தபோதே எதிர்த்துப் பேசிய துணிச்சல்காரர். உங்களைப் போல ஒரு படத்துக்காகக் கைகட்டி அணிலாக மாறிய கோழை அல்ல” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget