மேலும் அறிய

 மறுபிறவி என்பது உண்டா..? இல்லையா..?

நீங்கள் மனிதனாகப் பிறந்து ஒரு நட்சத்திரத்தில்.... ராசியில், அவதரித்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட கர்மாவை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

 இந்த பிறவியில் நீங்கள் மனிதனாகப் பிறந்து ஒரு நட்சத்திரத்தில்.... ராசியில், அவதரித்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட கர்மாவை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அடுத்த பிறவி என்பது உள்ளதா அல்லது அது கட்டுக்கதையா என்பது போன்ற கேள்விகள் அனைவருக்குமே இருக்கின்றன... இதற்கான தீர்வு என்பது இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு உண்டு இல்லை என்று சொல்லுபவர்களுக்கு இல்லை... ஆனால் சித்தர்களின் கூற்றுப்படி ஒருவர் இந்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பார் அடுத்த ஜென்மத்தில் அவர் என்னவாக இருக்க வாய்ப்புண்டு என்பது போன்ற கேள்விகளுக்கு அவர்களுடைய பழங்கால நூல்களில் பதில் கூறி இருப்பதாக சொல்லுகின்றனர்... அதேபோல் கிரக நிலைகளை வைத்தும் அடுத்த பிறவியில் ஒரு மனிதன் என்னவாக பிறக்க கூடும் என்றும் பழங்கால நூல்கள் இருக்கின்றன... அதை அடிப்படையாக வைத்து தான் தற்பொழுது மறுபிறவி பற்றி நாம் பேச போகிறோம்...

 நாடி சாஸ்திரத்தில் பொது காண்டம், திருமண பாவம், குழந்தை பாவம், அதே போல் அடுத்த பிறவி பாவம் என்று உண்டு... இதில் 12-ம் பாவத்தை வைத்து நாம் அடுத்த பிறவியில் இவர் என்னவாக இருக்கப் போகிறார் என்பது குறித்து கூறப்பட்டிருக்கிறது...

 லக்னத்திற்கு பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் அடுத்த பிறவியில் அவர் ராஜாவாகப் பிறப்பார் என்றும் அவருக்கு பணிவிடை செய்வதற்காக ஆட்கள் இருப்பார்கள் அவர் கட்டளையிட்டால் ஓடி வருவதற்கு ஒரு கூட்டமே இருக்கும்... இப்படியாக ஆட்சி அதிகாரம் மிக்க ஒரு நபராக மறுபிறவியில் அவர் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது...

 12 ஆம் பாவத்தில் சந்திரன் இருக்க பிறந்தவர் தாய் உள்ளம் கொண்டவராகவும் அனைவரையும் அரவணைத்து வாழக்கூடிய தன்மை உள்ளவராகவும்... அதிகமான பிள்ளைகளைப் பெற்றவராகவும்... சமையலில் ஆர்வம் உள்ளவராகவும்... வியாபாரத்திற்கு ஏற்ற நபராகவும் இருப்பார் என்றும்... தாய்க்கு மிகவும் பிடித்தமானவர் என்றும் கூறப்படுகிறது... கடல் கடந்து வாணிபம் செய்தல்... இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குதல்... கவிதை கட்டுரை இலக்கியம் போன்றவற்றில் தேர்ச்சி பெறுவதோடு அதில் புகழ் அடைதல் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்....

 12 ஆம் பாவகத்தில் செவ்வாய் இருந்தால் அவர் தளபதியாகவும், மிகுந்த கோபம் உள்ளவராகவும், அடுத்தவரை ஆளுமை செய்கின்ற அதிகாரம் படைத்தவராகவும், அதிகப்படியான வீடு மற்றும் நிலங்களை உடையவராகவும் சொத்துக்களை சேர்ப்பவராகவும் செயல்வீரராகவும் இருப்பார்...

 12 ஆம் பாவகத்தில் புதன் இருந்தால் அதிகம் படித்தவராகவும் மக்களுடன் சகஜமாக பேசக் கூடியவராகவும் இருப்பார்... பற்றி கூர்மை அதிகமாக இருக்கும்... காதலில் வெற்றி பெறக் கூடியவராக இருக்கும் சூழலில்... சர்வ சாதாரணமாக பொதுஜன வசியமுடையவராக இருப்பார்...

 பனிரெண்டாம் பாவகத்தில் குரு இருந்தால் முழு சுப கிரகமான குரு பனிரெண்டாம் பாவகத்தில் இருந்தால் அடுத்த பிறவியில் ஆன்மீக சிந்தனை கொண்டவராகவும் அதிகப்படியான கோவில் காரியங்களுக்கு நன்மை செய்பவராகவும்... ஆலயங்களை கட்டுபவராகவும் இருப்பார்... அரசருக்கு உபதேசம் சொல்பவராகவும்... அதிகப்படியாக பணங்களை கையாளுபவராகவும் இருப்பார்... அடுத்தவர்களுக்கு உபதேசித்து அதன் மூலம் வருமானம் ஈட்டுபவராகவும் இருப்பார்... நீதிபதி, குருக்கள், ஆசிரியர் போன்ற பதவிகளை வகிப்பார்கள்...

 12 ஆம் பாவகத்தில் சுக்கிரன் இருந்தால் மாளிகை போன்ற வீட்டில் வசிப்பவர்... பெண்கள் சவகாசம் அதிகமாக இருக்கும்... பணப்புழக்கம் அதிகம் இருக்கும்... துணிகள் வீட்டு உபயோகப் பொருட்கள் பேன்சி ஐட்டம்ஸ் போன்றவை இருக்கும் இடத்தில் இவர் அதிகம் இருப்பார்... இசையில் நாட்டம் உள்ளவராக இருக்கக்கூடும்... இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் வல்லவராக இருப்பார்... இவரை சுற்றி எப்பொழுதுமே பெண்கள் இருக்கும்படியான வேலைகள் அமையும்... ஆடம்பரமான வீட்டில் தங்குவார்....

 12ஆம் பாவகத்தில் சனி பகவான் இருந்தார்... நேர்மையானவராகவும் தவறு செய்யாதவராகவும் இருப்பார்... கடினமான உழைப்பாளி... உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னுக்கு வரும் பெரிய மனிதராகவும் திகழ்வார்... வயது கூட உழைப்பும் கூடிக் கொண்டே போகும்... எது சரி எது தவறு என்று பேசக்கூடிய நல்ல மனிதராக இருப்பார்... எந்த காரியத்தையும் இவரால் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியாது... எதற்கும் பொறுமையாக இருக்க வேண்டும் சகித்து செல்ல வேண்டும் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்... அரசனுக்கு ஒரு நல்ல சேவகனாக இவர் இருக்க வாய்ப்பு உண்டு... தொழிலாளர் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துபவராக இருப்பார்...

 12 ஆம் பாவத்தில் ராகு இருந்தால் என்ன பலன்... ஊர் விட்டு ஊர் செல்லும் நபராகவும் அலைந்து திரிவதில் மிகுந்த மகிழ்ச்சி உடையவராகவும்... ஒரு இடத்தில் இல்லாமல் பல இடங்களுக்கு சுற்றித் திரிபவராகவும் இருப்பார்... குறிப்பாக உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் இவர் பிரபல்யமானவராக திகழ வாய்ப்புண்டு... அந்நிய மதம் அந்நிய இனத்தை சார்ந்த மக்களுடன் இவர் வாழ்வார் குறிப்பாக தற்பொழுது ஒரு குடும்பத்தில் அவர் பிறந்திருப்பார் என்றால் அந்த குடும்பத்திற்கு அந்த நாட்டிற்கு துணியும் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு குடும்பத்தில் வேறு ஒரு நாட்டில் மறுபிறவி என்பது சாத்தியமாக இருக்கும்... அந்த மறுபிறவிக்கும் அவர் ஏற்கனவே தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பிறவிக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது... தூக்கம் கம்மியாக இருக்கும் அதிகம் தூக்கத்தை விரும்புவராக இருப்பார்...

 பன்னிரெண்டாம் பாவகத்தில் கேது இருந்தால் பொதுவாக அடுத்த ஜென்மம் தடை பட்டிருக்கும் அவருக்கு இல்லை என்று கூறுவது உண்டு... காரணம் இந்த ஜென்மத்திலேயே அவர்கள் கோவிலுக்கு போகவும் அதிகப்படியான ஆன்மீக நாட்டத்தை உடையவராகவும் இருக்க வாய்ப்புண்டு... மறுபிறவி பற்றி சிந்திக்காத ஒரு நபராகவும் கடவுளே அடுத்த பிறவி இவர்களுக்கு வேண்டாம் என்று 12 கேது வைத்து எழுதி வைத்தது போல இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது...

 இப்படியாக மறுபிறவியின் ரகசியத்தை குறித்து நாம் தெரிந்து கொள்வோமே ஆனால் இந்த ஜென்மத்தில் ஜாதகத்தில் லக்னத்திற்கு பன்னிரெண்டாம் பாவகம் லக்கின அதிபதி 12ஆம் வீட்டு அதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார் என்பதை வைத்து அவர் மறுபிறவியில் என்னவாக வரக்கூடும் என யூகிக்க முடியும் என்கின்றனர் சாஸ்திரம் எழுதி வைத்தவர்கள்...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
Embed widget