E Registration | திருமண வீட்டார் இ-பதிவு செய்வது எப்படி?
திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள நபர் (விண்ணப்பதாரர் - மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர்) ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம்.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக இரண்டு வார ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கு விதிமுறைகளில் மாவட்டங்களுக்குள் பயணம் செய்பவர்கள் இ-பதிவு செய்யவேண்டியது கட்டாயம் என அறிவித்திருந்த அரசு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் இ-பதிவு செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. இதில் தற்போது திருமண நிகழ்வில் பங்கேற்பவர்கள் எப்படி இ-பதிவு செய்யலாம் என்பதை இ-பாஸ் பதிவுத் தளத்தில் குறிப்பிட்டுள்ளது அரசு.
இதன்படி, ‘திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவிலேயே அனைத்து வண்டிகளுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள நபர் (விண்ணப்பதாரர் - மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர்) ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் பத்திரிக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ Epidemic Diseases Act, 1897 மற்றும் Disaster Management Act, 2005 இன் படி (சிவில் மற்றும் கிரிமினல்) நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அரசாங்க அடையாளம் (ஆதார், ரேஷன், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட்) தயாராக வைத்துக்கொள்ளவும்’.
Also Read: 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாட்ஸ்-அப் வழி தேர்வுக்கு நெறிமுறைகள் வெளியீடு