Jayakumar Arrest : "நான் ஓடல்லாம் மாட்டேன்” : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்படும் பரபரப்பு காட்சிகள்..
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் வைத்து ஜெயக்குமார் கைது செய்யப்படும்போது வீடியோ பதிவு செய்த அவரது மகன் ஜெயவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்படும் பரபரப்பு காட்சிகள்...!#JayakumarArrested https://t.co/hPBJ6Tiwq8
— Raja Shanmugasundaram (@SRajaJourno) February 21, 2022
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயவர்தன், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தரும் மரியாதை இதுதானா. எனது தந்தை கைது செய்யப்பட்டது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம்” என தெரிவித்திருக்கிறார். கைது குறித்து ஜெயக்குமாரின் மனைவி ஜெயக்குமாரி பேசும்போது, “கிட்டத்தட்ட 50 போலீஸார் வீட்டிற்குள் புகுந்து வந்து அவரை கைது செய்து சென்றனர். லுங்கி அணிந்திருந்த அவர் பேண்ட் மாற்றிவிட்டு வருவதாக அவகாசம் கேட்டதற்கு போலீஸார் நேரம் தர மறுத்தனர். 8 வழக்குகளின்கீழ் என சொல்லி அவரை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர். எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.
#BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது https://t.co/wupaoCz9iu | #Jayakumar #AIADMK #localbodyelection2022 #DMK pic.twitter.com/tJ4eXvUff4
— ABP Nadu (@abpnadu) February 21, 2022
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள பிரிவுகள் விவரம்:
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 147- கலகத்தில் ஈடுபடுதல்.
148- பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல்.
294(பி)- ஆபாசமாக திட்டுதல்.
153- கலகம் செய்ய தூண்டி விடுதல்.
355- தாக்குதலில் ஈடுபடுதல்.
323- காயம் ஏற்படுத்துதல்.
324- ஆயுதம் அல்லது வேறு வழிகளில் காயம் ஏற்டுத்துதல்.
506(2)- கொலை மிரட்டல்.
மற்றும்
பொதுசொத்தை சேதப்படுத்தல் சட்டபிரிவுகளில் 2 பிரிவுகள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்