கரூர் அருகே நீரில் மூழ்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
முகேஷ் மற்றும் ஊரில் உள்ள அவரது நண்பர்கள் 9 பேரும் சேர்ந்து மாயனூர் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் குளிப்பதற்காக வந்துள்ளனர். கதவணை அருகே குளித்துக் கொண்டிருந்தபோது முகேஷ் நீரில் மூழ்கி உள்ளார்.
மாயனூர் காவிரி கதவணை அருகே நீரில் மூழ்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகேஷ் (22) இவர் தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
இன்று மதியம் முகேஷ் மற்றும் ஊரில் உள்ள அவரது நண்பர்கள் 9 பேரும் சேர்ந்து மாயனூர் பகுதியில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது காவிரி கதவணை அருகே குளித்துக் கொண்டிருந்தபோது முகேஷ் நீரில் மூழ்கி உள்ளார்.
நீரில் மூழ்கிய முகேஷ் நீண்ட நேரம் கழித்தும் வெளியே வராததால் அச்சமடைந்த நண்பர்கள் அருகில் இருந்த மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தேடத் துவங்கி உள்ளனர். அப்போது நீரில் மூழ்கிய முகேஷ் மீனவர்கள் மூலமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மாயனூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்