மின் கட்டண பாக்கி எவ்வளவு? தமிழகத்தில் மின்வெட்டு வருமா? விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர்!
மத்திய அரசு தமிழ்நாடு அரசு 924 கோடி ரூபாய் மின்பாக்கி செலுத்த வேண்டும் என கோரி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு 70 கோடி மட்டுமே மின் பாக்கி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்கட்டமைப்பை நிர்வகிக்கும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் முதல்முறையாக 13 மாநிலத்துக்கு எதிராக இந்த தடையை தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த தடையால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ’மத்திய அரசினுடைய எரிசக்தி துறையால் கடந்த 03.6.2022 "லேட் பேமென்ட் சார்ஜஸ் ஸ்கீம்" என்ற தமிழ்நாடு மின்சார வாரியம் நிலுவைத் தொகை வழங்காததால் எக்ஸ்சேஞ்சில் வந்து மின்சாரம் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் மின்வெட்டு வரும் என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது சம்பந்தமான விளக்கங்கள் உங்களிடம் கூறுவது எனது கடமையாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். பொதுவாக ஒவ்வொரு மாநிலங்களும் மின்சாரத்தை கொள்முதல் செய்வது அதற்கான தொகை வழங்கப்படுகின்ற பொழுது அவர்கள் அந்த பில்லில் எவ்வளவு கட்டணம் வர வேண்டிய உள்ளது என்ற சில கருத்துக்கள் இருக்கலாம்.
அதிகமான தொகைகள் குறிப்பிட்டு இருக்கலாம். அதற்கான விளக்கங்கள் கொடுத்து தான் இதுவரைக்கும் கட்டணம் கொடுக்கும் நடைமுறைகள் உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு கடந்த 03.06.2022 அன்று "லேட் பேமென்ட் சார்ஜஸ் ஸ்கீம்" என்ற திட்டத்தை கொடுக்கிறார்கள். அந்தத் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு மாநிலங்களும் மின் உற்பத்தியாளருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை கேட்,டு அதற்கான வட்டியும் கணக்கீடு செய்யப்பட்டு, 48 மாதங்களாக பிரித்து ஒவ்வொரு மாதங்களிலும் ஐந்தாம் தேதிக்குள் அவர்களுக்கான அந்த கட்டணம் 48 மாதங்களாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்ற திட்டம் தான் அந்த திட்டம்.
அப்படியே நம்முடைய தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது.
361 கோடி கொடுக்கப்பட்டு விட்டது. அதற்கு அடுத்ததாக மீதம் இருக்கக்கூடிய தொகை என்பது தமிழ்நாடு மின்சார வாரியம் குறிப்பாக மத்திய அரசு "டிராபிக் போர்டல்: என்ற போர்டலை உருவாக்குகிறார்கள். அந்த போர்டல் வந்து மின்சாரம் உற்பத்தி செய்து மாநிலங்களுக்கு கொடுக்கக்கூடிய, மின் உற்பத்தியாளர்கள் தங்களுடைய பில் தொகையை அதில் பதிவிடுவார்கள். அதற்கான விளக்கங்கள் கேட்பதற்கோ அல்லது நம்முடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கோ அந்த பில்லில் ஏதேனும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின், பில்லில் பேமென்ட் கூடவோ குறைவாகவோ இருந்தால் அது சம்பந்தமாக டஜன் கோ அதில் பதிவிடுவதற்கான வழி வகைகள் அதில் இல்லை. அந்த சூழலில் அவர்கள் எவ்வளவு பில் போட்டாலும் அதை கொடுக்கின்ற சூழல் தான் இருக்கிறது. நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுக்க வேண்டிய தொகைகள் கொடுக்கப்பட்டு விட்டது.
அதில் பதிவிட்ட தொகை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட தொகைகள் வந்து, வரவு வைப்பதற்கான பதிவுகள் அதில் இல்லை. அதனால் நமக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை எக்ஸ்சேஞ்சில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டதாக ஒரு கருத்து உண்மை தான். அது அந்த சூழலில் தான் நாம் கொடுக்க வேண்டிய தொகைகள் மட்டும், இன்று இன்னும் 70 கோடி மட்டும் கொடுக்க வேண்டி உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இரண்டு தினங்களுக்குள் அந்த 70 கோடியும் விடுவிக்கப்படும். எனவே நம்முடைய நிலுவைத் தொகை மிக கூடுதலாக இருப்பதாகவும், அந்த மின் உற்பத்தியாளர்கள் என்ன தொகை பதிவிட்டு இருக்கிறார்களோ அந்தத் தொகையை முழுவதுமாக கொடுக்க வேண்டிய சூழ்நிலை அக்கவுண்டில் சரி பார்த்து பதிவிடுவதற்கான வழிவகைகளும், அந்தப் போர்டலில் ஏற்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்ட இந்த குளறுபடிகள் தான் இந்த சூழல். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு கூட்டங்களையும் நடத்தி, திட்டங்களையும் வழங்கி, சீரான மின் விநியோகத்திற்கான அனைத்து வழி வகைகளும் செய்திருக்கின்றார்கள்.
குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஏறத்தாழ 16 ஆயிரத்து, 33 மெகாவட்டு அளவிற்கு நேற்று உச்சபட்ச மின் தேவைகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக 343 மில்லியன் யூனிட் அளவிற்கு மின் நுகர்வு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல், சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு ஏறத்தாழ 16 ஆயிரத்து, 200 மெகாவாட் அளவிற்கு உச்சபட்ச மின் தேவை இருக்கும் என்று கணக்கிடப்பட்டு வருகின்றன. இன்று மாலை பதினையாயிரத்தி ஐநூறு மெகாவட்டு அளவிற்கு நுகர்வு இருந்தது ஆக, இவ்வளவு அதிகமான மின் நுகர்வு இருந்தாலும் கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதற்கு காரணம் முதலமைச்சர் மின்வாரியத்தை கண்காணித்து திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்து, அதன்படி மின்சார வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இது சம்பந்தமாக செய்திகளை ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவர்களோ, சமூக அமைப்பு பொதுநல அமைப்பை சார்ந்தவர்களோ பதிவிட்ட கருத்துக்களை, அது சம்பந்தமான என்னிடம் அல்லது உயர் அதிகாரிகளிடமே கருத்துக்களைக் கேட்டு நீங்கள் பதிவிட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஒரு பதட்டத்தை பொதுமக்களிடையே உருவாக்கிட வேண்டாம். மின்வட்டை ஏற்பட்டு மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற சூழல் வந்து விடக்கூடாது என்பதற்காக சொல்கிறேன். நாம் கொடுக்க வேண்டியது 70 ஆயிரம் கோடி தான்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்பட்டு அந்தப் போர்டலில் இருதரப்பு கருத்துக்களையும் கேட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும். காற்றாலை பொறுத்தவரை கடந்த காலங்களில் போல இல்லாமல் இந்த வருடம் ஒரு யூனிட் கூட வீணாகாமல், முழுவதுமாக நுகர்வு செய்யப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சோளாரும் அதே போல தான் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது எக்சேஞ்ச் மின்சாரம் இரண்டு நாட்களுக்குள் வாங்கவில்லை என்றால் கூட சமாளிக்க முடியும். அது நம்முடைய நிர்வாக திறமை தான். முதலமைச்சர் வலியுறுத்தலின் காரணமாகத்தான் மிக சிறப்பான நிர்வாகத் துறை, மின்சாரம் வாங்காமல் சமாளிக்க கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மொத்தம் 924 கோடி நம்ம வந்து கட்ட வேண்டியது என்று சொன்ன கணக்கு. இப்போது, நாம் கட்ட வேண்டியது 70 கோடி மட்டுமே கொடுக்க வேண்டும். அதுவும் இன்று கொடுக்கப்பட்டு விடும்’’ என்றார்.