மேலும் அறிய

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்

TN Governor: ஆளுநர் உயர்கல்வித் துறையின் நிர்வாகப் பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவது சட்டப்படி தவறு என, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சாடியுள்ளார்.

TN Governor: மாநில அரசுக்கு அன்றாடம் ‘‘தலைவலி’’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? என,  திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரை கண்டித்து கி. வீரமணி அறிக்கை:

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றியே நடக்கக் கடமைப்பட்டவரே தவிர, சுய அதிகாரம் கொண்டவரல்ல!  உயர்கல்வித் துறையின் நிர்வாகப் பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவது சட்டப்படி தவறே!  உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர, அவசியக் கடமையாகும்!  மாநில அரசுக்கு அன்றாடம் ‘‘தலைவலி’’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா?

”சாதனைகளை நிகழ்த்தும் திராவிட அரசு”

தமிழ்நாடு ‘திராவிட மாடல்‘ அரசு நமது சமூகநீதிக்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஒப்பற்ற ஆளுமையின்கீழ் கல்வித் துறைகளில் – அது பள்ளிக் கல்வியானாலும், உயர்கல்வித் துறையானாலும், தொழிற்கல்வித் துறையானாலும் அனைத்திலும் மிகச் சிறப்பான சாதனைகளை நாளும் செய்து, அனைத்திந்திய மாநிலங்களில் தனித்தோங்கி நின்று வரலாறு படைத்து வருகிறது! தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. (மற்ற துறை பல்கலைக் கழகங்கள் தனி). பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன!

நிரப்பப்படாத துணைவேந்தர் பதவிகள்:

கீழ் குறிப்பிடும் ஆறு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக – நிரப்பப்பட முடியாத நிலையில், அவை காலியாகவே உள்ளன. 1. சென்னை பல்கலைக் கழகம், சென்னை 2. கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் (கோயம்புத்தூர்) 3. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், சென்னை 4. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை 5. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம் 6. மதுரை காமராசர் பல்கலைக் கழகம்.  மேலும் 1. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் 2. சேலம் பெரியார் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்களில் தற்போதுள்ள துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஆளுநரால் மேலும் ஓராண்டு காலம் (அவருக்கு வேந்தர் என்ற Ex-officio தகுதி உள்ளதைப் பயன்படுத்தி) பதவி நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.

ஆளுநர் மீது விமர்சனம்

அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த ஆளுநர் பதவியில் இருப்பதால், அரசு பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கிறார். ‘‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின்மூலமாக வேந்தர் பதவி அமையவேண்டும்; ஆளுநர் பதவி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவி அல்ல. மாறாக, ஒன்றிய அரசின் நியமனம் ஆளுநராக ஏற்பட்டதால் உருவான ஒரு வாய்ப்பு’’ என்பதை மாற்றி, வேந்தர் பற்றிய சட்டத் திருத்தம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பாமல், அப்படியே கிடப்பில் வைத்து, உயர்கல்வித் துறையின் பல நிர்வாகப் பணிகளுக்கு சதா முட்டுக்கட்டைப் போட்டு – தனது அதிகாரத்திற்கு மீறிய செயல்களை செய்து – தற்போதுள்ள ‘திராவிட மாடல’ ஆட்சிக்கு அன்றாடம் தலைவலி தந்து, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், தாம் பதவிப் பிரமாணத்தில் எடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாகவும், அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒரு போட்டி அரசினையே (Parallel Government) நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் உயர்கல்வித் துறையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பது பல கல்வி அறிஞர்கள் மற்றும் மக்களின் கவலையாகவே இருக்கிறது!

தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர்:

தன்னிச்சையாக நிராகரித்ததோடு, பகிரங்கமாகவே அறிக்கை வெளியிடுகிறார்! எடுத்துக்காட்டாக, அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவினை (Search Committee) தமிழ்நாடு அரசு நியமித்தது ஏற்கத்தக்கதல்ல என்று அவர், தன்னிச்சையாக நிராகரித்ததோடு, பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் ஆளுமைக்கு அவப்பெயர் ஏற்படும்படிச் செய்கிறார். தான் விரும்பும் வண்ணம் மூவர் குழுவை, நால்வர் குழுவாக (அத்தேடல் குழுவை) வற்புறுத்தி அப்பல்கலைக் கழக சட்டத்தின்படி செயல்பட முடியாத ஒரு சட்ட மீறலில் ஈடுபடுகிறார்.

புறக்கணிக்கவே முடியாது –கூடாது!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகமும் உயர்கல்வித் துறையின்கீழ் செயல்பட்டாலும்கூட, அந்தந்த பல்கலைக் கழகங்கள் தனித்தனி சட்டங்கள்மூலம் உருவாக்கப்பட்டு, அதன்படி அவை செயல்பட வேண்டியவை ஆகும். பல்கலைக் கழக சுயாட்சி (University Autonomy) என்பதை புறக்கணிக்கவே முடியாது –கூடாது! இப்போது திடீரென பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினர் பரிந்துரைக்கும் ஒருவரைத் தேடல் குழுவில், நான்காவது உறுப்பினராக நியமனம் செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதற்கு ஏதோ ஒரு முக்கிய காரணம் பதுங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது.

அவசர நடவடிக்கை அவசியம்:

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழு (Search Committee) அமைப்பதானது ஒரு நிர்வாக நடைமுறை (Administrative Procedure). அரசமைப்புச் சட்டப்படி அனைத்து நிர்வாக நடைமுறைகளிலும் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றியே நடக்கக் கடமைப்பட்டவரே தவிர, சுய அதிகாரம் கொண்டவரல்ல. இதுதான் அரசமைப்புச் சட்டப்படி உள்ள முறை. இதை மீறினால், அது அரசமைப்புச் சட்ட விதிகளை மீறிய அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கையே! உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசர, அவசியம்! இவற்றை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி தமிழ்நாடு அரசு நடத்தும்போது, தக்க சட்ட நிபுணர்களைக் கொண்டு, தாமதப்படுத்தாமல் நடத்தி, இப்பிரச்சினையால் உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசர, அவசியக் கடமையாகும்” என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.