மேலும் அறிய

”மேகதாது அணை குறித்து பேச்சு நடத்தும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது’ - ராமதாஸ் !

”தமிழகத்தை பாதிக்கும் வகையில்  கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது” என இராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

”மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். மேகேதாட்டு விவகாரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கோரிக்கையை  தமிழகம் நிராகரித்து விட்ட நிலையில், அவரது குரலை மத்திய அமைச்சர் எதிரொலிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
 
”மேகதாது அணை குறித்து பேச்சு நடத்தும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது’ - ராமதாஸ் !
 
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும், இந்த விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்கக்கூடாது என்றும்,  கர்நாடகத்துடன் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்தக்கூடாது என்றும் நான் வலியுறுத்தி இருந்தேன். அதைத் தொடர்ந்து அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து கர்நாடகத்துடன் பேச்சு நடத்தப்படாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
 
ஆனால், கர்நாடக தலைநகரம் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத், ‘‘ மேகேதாட்டு சிக்கலை இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தி தீர்க்க  வேண்டும். கர்நாடகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை ஆய்வு செய்து அம்மாநிலத்திற்கு மத்திய அரசு நீதி வழங்கும்’’ என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ‘‘மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம். அதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுத் தருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறதோ? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

”மேகதாது அணை குறித்து பேச்சு நடத்தும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது’ - ராமதாஸ் !
1892-ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே  செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரி உள்ளிட்ட மாநிலங்களிடையே பாயும் எந்த ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்கு கடைமடை மாநிலமான தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதை உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் உறுதி செய்துள்ளன. மத்திய அரசும் பல்வேறு தருணங்களில் இந்த நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் பா.ம.க. மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் இதை  உறுதி செய்துள்ளார். அதன்பின் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாத நிலையில் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடகமும், தமிழ்நாடும் பேச்சு நடத்த வேண்டிய தேவை எங்கு எழுந்தது?
 
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு ஆதரவான குரல்கள் தான். 1970-களில் காவிரி சிக்கல் குறித்து தமிழகத்துடன் பேச்சு நடத்திக் கொண்டே காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே நான்கு அணைகளை கர்நாடகம் கட்டியது. அதைத் தடுக்காமல் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதே போன்ற துரோகம் இப்போதும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் மேகேதாட்டு அணை உட்பட காவிரி சிக்கல் தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு நடத்தக்கூடாது என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, பேச்சு நடத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.

”மேகதாது அணை குறித்து பேச்சு நடத்தும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது’ - ராமதாஸ் !
மேகேதாட்டு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் மேகேதாட்டு அணையை கட்ட முடியாது என்பது தான் சட்டப்படியான இன்றைய நிலையாகும். இதை கர்நாடகம் மீறாமல் பாதுகாக்க வேண்டியது தான் மத்திய அரசின் கடமையாகும். மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகம் எத்தனை விண்ணப்பங்களை தாக்கல் செய்தாலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லை என்றால் அவற்றை  மத்திய அரசு ஆய்வு செய்யாமலேயே நிராகரிப்பது தான் நீதியாகும். இதைத் தவிர பேச்சுவார்த்தை - ஆலோசனை என்ற எந்தப் பெயரில் இது குறித்த விவாதம் நடைபெற்றாலும் அது இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் நீர்த்துப் போகவே வழி வகுக்கும்.
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !
 
எனவே, மேகேதாட்டு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளையும், 1892&ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையும் செயல்படுத்தும் அமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். மாறாக, மேகேதாட்டு விவகாரத்தில், தமிழகத்தை பாதிக்கும் வகையில்  கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget