மேலும் அறிய

Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?

இந்தியாவில் தனிநபர் கடனுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது? எவ்வளவு தவணை செலுத்த வேண்டும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஒவ்வொரு வங்கியும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் தனிநபர் கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் எந்தெந்த வங்கிகள் தனிநபர் கடனுக்கு எத்தனை சதவீதம் வட்டி வசூலிக்கிறது? என்பதை கீழே காணலாம்.

1.HDFC Bank - 9.99 சதவீதம் முதல் 

இந்த வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 621 தவணை செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் கால வரம்பில் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 124 தவணை கட்ட வேண்டும்.

2. Tata Capital - 10.99 சதவீதத்திற்கு மேல்

டாடா கேபிடல்லில் 10.99 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. இங்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் குறைந்தது ரூபாய் 10 ஆயிரத்து 869 தவணையாக செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் கால வரம்பில் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 174 செலுத்த வேண்டும்.

3. State Bank Of India - 10.05 - 15.05 சதவீதம் வட்டி

எஸ்பிஐ வங்கியில் 10.05 முதல் 15.05 வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.  5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் தவணையாக ரூபாய் 10 ஆயிரத்து 636 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 908 கட்ட வேண்டும். 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 127  முதல் 2 ஆயிரத்து 382 தவணையாக செலுத்த வேண்டும். 

4. ICICI வங்கி - 10.45 சதவீதத்திற்கு மேல்

ICICI வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 735 தவணை செலுத்த வேண்டும். 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் குறைந்தது ரூபாய் 2 ஆயிரத்து 147 தவணை கட்ட வேண்டும்.

5. Bank Of Baroda - 10.45 - 18.05 சதவீதம்

பரோடா வங்கியில் 10.45 சதவீதம் முதல் 18.05 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 722 முதல் 12 ஆயிரத்து 710 வரை தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 144 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 542 வரை தவணை கட்ட வேண்டும். 

6. Axis வங்கி - 9.99 சதவீதம் முதல்

Axis வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் குறைந்தது ரூபாய் 10 ஆயிரத்து 621 தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 124 குறைந்தது கட்ட வேண்டும். 

7. Kotak Mahindra Bank - 10.99 சதவீதம் முதல்

Kotak Mahindra வங்கியில் 10.99 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் 10 ஆயிரத்து 869 முதல் தவணை செலுத்த வேண்டும். ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 174 வரை தவணை செலுத்த வேண்டும். 

8. Canara Bank - 9.95 முதல் 15.40 சதவீதம் வரை

Canara வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 611 முதல் ரூபாய் 12 ஆயிரம் வரை தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் 2 ஆயிரத்து 122 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 400 வரை தவணை செலுத்த வேண்டும். 

9.Punjab National Bank - 10.50 முதல் 17.05 சதவீதம் வரை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 747 முதல் ரூபாய் 12 ஆயிரத்து 440 வரை தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 149 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 488 வரை தவணை செலுத்த வேண்டும். 

10. HSBC வங்கி - 9.99 சதவீதம் முதல்

HSBC வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 621 முதல் தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 124 செலுத்த வேண்டும். 

11. Federal Bank - 11.99 சதவீதம் முதல்

Federal வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 11 ஆயிரத்து 120 முதல் தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 224 தவணை செலுத்த வேண்டும்.

12. Union Bank Of India - 10.35 முதல் 14.45 சதவீதம் வரை

யூனியன் வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 710 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 751 தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 142 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 350 தவணை கட்ட வேண்டும். 

13. Bajaj Finserv - 10 முதல் 31 சதவீதம் வரை

Bajaj Finserv-வில் ரூபாய் 5 லட்சத்தை 5 ஆண்டுகள் கால வரம்பில் கடன் வாங்கினால் மாதந்தோறம் ரூபாய் 10 ஆயிரத்து 624 முதல் ரூபாய் 16 ஆயிரத்து 485 செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 125 முதல் ரூபாய் 3 ஆயிரத்து 297 வரை செலுத்த வேண்டும்.

14.  Punjab Sind Bank - 9.60 முதல் 13.85 சதவீதம் வரை

இந்த வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 525 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 595 செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 105 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 319 செலுத்த வேண்டும். 

15. Indian Overseas Bank - 10.50 சதவீதம் முதல்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்  5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 747 தவணை கட்ட வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 149 தவணை செலுத்த வேண்டும். 

16. UCO வங்கி - 10.20 முதல் 13.45 சதவீதம் வரை

UCO வங்கியில் ரூபாய் 5 லட்சம் கடனை 5 ஆண்டுகள் கால வரம்பில் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 673 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 492 செலுத்த வேண்டும். ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 135 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 298 தவணையாக செலுத்த வேண்டும். 

17. IDFC First Bank - 9.99 சதவீதம் முதல்

IDFC First வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்த 621 முதல் தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 124 செலுத்த வேண்டும். 

18. Bank Of Maharashtra - 8.75 சதவீதம் முதல் 13.55 சதவீதம் வரை

மகாராஷ்ட்ரா வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 319 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 518 வரை தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 064 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 304 வரை செலுத்த வேண்டும். 

19. Central Bank Of India- 9.65 சதவீதம் முதல் 11.55 சதவீதம் வரை

சென்ட்ரல் வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் வசூல் செய்தால் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 538 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 009 தவணை செலுத்த வேண்டும். அதே கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 2 ஆயிரத்து 108 முதல் ரூபாய் 2 ஆயிரத்து 202 தவணை செலுத்த வேண்டும்.

20. Indusind Bank - 10.49 சதவீதம் முதல்

Indusind வங்கியில் 10.49 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால  வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கினால் ரூபாய் 10 ஆயிரத்து 744 வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கினால் மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 149 தவணை செலுத்த வேண்டும். 

ஒவ்வொரு வங்கிக்கும் ப்ராஸஸிங் கட்டணம் தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?
ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?
Embed widget