மேலும் அறிய

கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !

கீழடி அகழாய்வு தொடர்ச்சியான கொந்தகை ஆய்வில் ஒரே சமதள குழியில் 7 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை துவங்கியது. இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது.
 

கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !
இந்நிலையில், கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கதிரேசன் - சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழைமையான ஈமக்காட்டில்  முதுமக்கள் தாழியில்  எலும்புகள் கிடைத்தன. 6-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது 75 செ.மீ அளவுள்ள குழந்தையின் முழு எலும்புக் கூடு கிடைத்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து  ஒரு குழந்தையின் எலும்பு ஒன்று 95 செ.மீ அளவில் கிடைத்தது.
 

கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !
நேற்றைய கொரோனா அப்டேட்ஸ் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - TN Corona Update: மதுரையில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு
 
இப்படி தொடர்ந்து 6-ம் கட்ட அகழாய்வில் கொந்தகை, மணலூர், கீழடி, அகரம் ஆகிய நான்கு இடங்களிலும் முக்கிய பொருட்கள் கிடைத்தன. ஆனால் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி துவங்கி சில மாதங்களிலேயே முழு ஊரடங்கு போடப்பட்டது. இந்நிலையில் முழு ஊரடங்கு தளர்வுக்கு பின்பாக கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களிலும் தொல்லியல் ஆய்வு விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொந்தகை அகழாய்வில் ஒரே சமதள குழியில் 7 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !
 
மேலும் இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில்...,” கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு, 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் கொந்தகையில் நடைபெறும் அகழாய்வு பழமையான ஈமக்காடு. பண்டைய தமிழர்கள் புதைக்கப்படும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்து புதைத்துள்ளனர். அதன் பொருட்களும்  கிடைத்திருப்பது சான்று. ஒரே இடத்தில் வெவ்வேறு மாதிரிய பழக்கங்கள் இருந்ததையும் உணர முடிகிறது. எனினும் இங்கு கிடைக்கப்படும் எலும்புகளை பிரத்யேக ஆய்வுக் கூடங்களில் முழுமையான ஆய்வு செய்யும்போதுதான் பல்வேறு தகவல்கள் வெளிவரும்.
 

கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !
 
7-ம் கட்ட அகழாய்வுப் பணி முழு ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது விறு விறுப்பாக பணிகள் வேகமெடுக்கிறது. எனவே செப்டம்பர் மாதத்திற்கு பின்பும் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடர தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்” என ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
 

தலைப்பு செய்திகள்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!
மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!
பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget