Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 21st: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

நெல்லையில் ஸ்டாலின்
நெல்லையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 15 புதிய பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார். பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததன் அடையாளமாக முதலமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கிய சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு
தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை காலை 10.30க்கு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுகிறார் தவெக தலைவர் விஜய். QR Code வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை
ராமதாஸ் அழைப்பு
2026ம் ஆண்டு புத்தாண்டு சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு. வரும் 29ம் தேதி சேலத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 2026 பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிப்பு.
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை இயக்குநராக உள்ள லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் ஷர்மா வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.2.23 கோடி பணம் பறிமுதல். லஞ்சப் புகாரில் தீபக் குமார் ஷர்மா வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர் மற்றும் வினோத் குமார் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இரட்டை இன்ஜின் ஆட்சி
"பீகாரில் NDA கூட்டணி பெற்ற வெற்றி மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும். ஏனெனில் பீகாரில் இருந்தே கங்கை மேற்குவங்கத்திற்குள் பாய்கிறது. 2026ல் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பளித்து இரட்டை எஞ்சின் ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்"- பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
புதுமண ஜோடி மரணம் - சண்டையிட்டதால் நடந்ததா?
ஆந்திராவின் வாங்கப்பள்ளி அருகே ரயிலில் இருந்து விழுந்து புதுமண ஜோடி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, இருவரும் ரயிலில் சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது
உயிரிழந்த சிம்மாசலம் (25) - பவானி (19) இருவரும் ரயிலில் சண்டை போடுவதை மற்றொரு பயணி வீடியோ எடுத்துள்ளார். வாயிலில் நின்று வாக்குவாதம் செய்த போது கீழே விழுந்தார்களா? அல்லது சண்டையால் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து தற்கொலையா? என விசாரணை
மஸ்க்கின் வரலாற்றுச் சாதனை
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, 749 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு. இதன் மூலம் வரலாற்றில் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 2வது இடத்தில் கூகுளின் லோரி பேஜ் உள்ளார்.
ஆஷஷ் தொடரை இழந்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று, ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இங்கிலாந்து அணி வெற்றி பெறவில்லை. இரு டெஸ்ட் போட்டிகளை டிரா செய்த இங்கிலாந்து அணி மீதமுள்ள 16 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
கோப்பை யாருக்கு?
U19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை துபாயில் இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்திய நேரப்படி காலை 10.30க்கு போட்டி தொடங்க உள்ளது.
கான்வே சாதனை:
ஒரு டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் டேவன் கான்வே. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 227 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 100 ரன்களும் விளாசி இருந்தார்.





















