DGP Sylendra Babu: அரை மணி நேரம்தான் டைம்... குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி!
தமிழக காவல்துறை அறிவித்துள்ள 1098,181,100 ஆகிய இலவச உதவி எண்கள் மூலமாக பாலியல் புகார்கள் காவல்துறைக்கு வருகின்றன
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை எப்படி கையாள வேண்டுமென விசாரணை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
துரதிர்ஷ்ட வசமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன. பாலியல் சீண்டல்களுக்கு எதிராக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை எப்படி கையாள வேண்டுமென விசாரணை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
லோன் கொடுக்காத கனரா பேங்க்! பெட்ரோலை ஊற்றி கொளுத்திய கோபக்கார வாடிக்கையாளர்!
அதன்படி, தமிழக காவல்துறை அறிவித்துள்ள 1098,181,100 ஆகிய இலவச உதவி எண்கள் மூலமாக பாலியல் புகார்கள் காவல்துறைக்கு வருகின்றன. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நபர் நேரடியாகவோ, குடும்ப உறுப்பினர்கள் மூலமும் மற்றும் சமூக நலத்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலமும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் காவல் நிலையங்களுக்கு வருகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கக்கூடிய விசாரணை அதிகாரி, சமூக நல பாதுகாப்பு துறையால் அமர்த்தப்பட்ட மன நல ஆலோசகர் உதவியுடன் புகாரை கையாள வேண்டும். உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் எனவும் டிஜிபி குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை விசாரணை அதிகாரி உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டுமெனவும், பாலியல் புகார் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு தாமதிக்காமல் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிபியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்