லோன் கொடுக்காத கனரா பேங்க்! பெட்ரோலை ஊற்றி கொளுத்திய கோபக்கார வாடிக்கையாளர்!
33 வயதான வாசிம் என்பவர் கர்நாடகாவின் ரட்டிஹல்லி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஹாவேரி பகுதியில் உள்ள கனரா வங்கியில் லோன் வாங்க முயற்சி செய்துள்ளார்.
கடன் கொடுக்க வங்கி மறுத்துவிட்ட காரணத்தால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு தீவைத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
வங்கிகளில் பல வகையான கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் கடனுதவிகள் எடுத்த உடனேயே கிடைத்துவிடுவதில்லை. கடன் வாங்குபவர் கடனுதவிக்கு ஏற்ற நபரா? கடனை திருப்பிக்கட்டும் வசதி அவரிடம் உள்ளதா என ஆராயப்படுகின்றன. அதன்பிறகே கடனுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக சிபில் ஸ்கோர் எனப்படும் நம் பெயர் மீதான எண் பரிசோதிக்கப்படுகிறது. இதுவரை வேறு எங்கும் கடன் பாக்கி வைக்காமல் முறையாக அனைத்தும் கடைபிடிக்கப்பட்டால் சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கும். அதன்பின்பே வங்கிகள் கடனுதவியை பயம் இல்லாமல் கொடுக்கின்றன. இந்நிலையில் ஒருவரின் சிபில் ஸ்கோர் ஒரு வங்கிக்கு 12 லட்ச ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது.
Crime | கணவரின் கட்டாயத்தினால் பலருடன் உறவு..சமூகவலைதள க்ரூப்புகளில் கொடூரம்.. 6 பேர் கைது
33 வயதான வாசிம் என்பவர் கர்நாடகாவின் ரட்டிஹல்லி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஹாவேரி பகுதியில் உள்ள கனரா வங்கியில் லோன் வாங்க முயற்சி செய்துள்ளார். அனைத்துக் கட்ட வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் வங்கிக்கு சென்ற வாசிமிடம் உங்களுக்கு லோன் இல்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏன் என அதிர்ச்சியடைந்துள்ளார் வாசிம். சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாக லோன் தர வாய்ப்பில்லை என கைவிரித்துள்ளது வங்கி.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாசிம் வங்கி நிர்வாகத்திடம் சண்டையிட்டுவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் கடந்த சனிக்கிழமை இரவு பூட்டிக்கிடந்த வங்கி வாசலில் பெட்ரோலுடன் வந்துள்ளார் வாசிம். லோன் கொடுக்காத வங்கி எதற்கு என ஜன்னலை உடைத்த வாசிம், அதன் வழியாக பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். தீ மள மளவென பரவி வங்கி எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்த தப்ப முயன்ற வாசிமையும் அங்குள்ளவர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய போலீசார், வங்கியில் கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 5 கணினிகள், மின் விசிறிகள், மின் விளக்குகள், பாஸ்புக் ப்ரிண்டர் மெஷின், பணம் எண்ணும் மெஷின், சில ஆவணங்கள், சிசிடிவி, கேஷ் கவுண்டர் என பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வாசிமை கைது செய்துள்ள போலீசார் இது குறித்து தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்