பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு மாட்டுச்சாணத்தின் வறட்டியை பயன்படுத்தி வந்தநிலையில் தற்போது கொரோனா மரணங்களால் திருவண்ணாமலையில ராக்கெட் வேகத்தில் விலை உயர்வை கண்டுள்ளது மாட்டு சாணவறட்டிகள்.

திருவண்ணாமலையில் சமுத்திரம் காலனி, வேட்டவலம் ரோடு திண்டிவனம் சாலை ,போன்ற இடங்களில் மட்டும் மாட்டு சாணத்தின் வரட்டி பெரும் அளவில் விற்கப்படுகின்றது.  கிராமப்பகுதியில் இருந்து மாடு வைத்திருப்பவர்கள் சாணியை வறட்டி தட்டி காயவைத்து அதன் பின்னர் திருவண்ணாமலையில் வரட்டி சாணம் வியாபாரம் செய்பவர்களிடத்தில்  வரட்டிகளை ஒன்று 1 ரூபாய் என்னும் விகிதத்தில் விற்பனை செய்து வந்தனர். இறந்தவரின் உடலைகளை எரிப்பதற்கு வியாபாரிகளிடம் இருந்து இறந்தவர்களின் உறவினர்கள் தற்போது அதிக அளவில்  வறட்டிகளை வாங்குவதால் வறட்டிகளுக்கு பெருமளவில் தேவை கூடியிருக்கிறது.

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

தற்சமயம் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை  29622 நபர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மாவட்டத்தில் இதுவரை  340 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இயற்கையான மரணங்கள் , விபத்து என்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 17-இல் இருந்து 20 உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் இறந்து அவர்களின் உடல்கள் அருகில் உள்ள ஈசான்ய தகனமேடையில்' எரிக்கப்பட்டு வந்த நிலையில், தகனமேடை தற்போது பழுதாகி உள்ளது. அதனால் சாண வறட்டி மூலம் எரிப்பது தகனமேடையை வீட கூடுதல் செலவு ஆகிறது

சமுகசேவகர் P மணிமாறனிடம் கேட்டறிந்தபோது,

“திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஈசானிய லிங்கம் அருகே நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தகன மேடையில் திருவண்ணாமலை நகராட்சியில் இருந்து சடலங்களை எரிப்பதற்காக அதிக அளவில் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகனமேடை சமீபகாலமாக பழுதாகி உள்ளது. சடலம் எரியூட்டப்படும் கல்லானது உடைந்த நிலையிலும், தொழில்நுட்ப கோளாறும்  ஏற்பட்டுள்ளதால் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகனமேடை பழுதாகி உள்ளதால்  எரியூட்ட வரும் சடலங்களை  தகன மேடை பகுதிக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் சடலங்களை எரியூட்டப்படுகிறது. எரிவாயு தகனமேடை பழுதடைந்துள்ளதால் சடலங்களை எடுத்துவருபவர்களே சாண வறட்டி வாங்கிவந்து கொடுக்க வேண்டும். அதன் பின்புதான் சடலங்கள் எரிக்கப்படுகிறது. எரிவாயு தகன மேடை செயல்பட்டுவந்தபோது ஒரு நாளைக்கு 15-இல் இருந்து 20 சடலங்கள் வரை எரியூட்டப்பட்டது. ஆனால் இப்போது தகனமேடை பழுதானதால் குறைந்த அளவே சடலங்கள் எரிக்கப்படுகிறது. அதிக அளவில் உயிரிழப்புகள் உள்ளதால் திருவண்ணாமலையில் உள்ள 5 இடுகாடுகளில் இறந்தவரின் உடல் எரிப்பதற்கு நிறைந்து வருகிறது அதாலால் விரைவில் எரிவாயுவு தகன மேடை விரைவில்சரி செய்யவேண்டும் எனவும்  புதியதாக  மற்றொரு இடத்தில் நவீன முறையில்  எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

நல்லடக்கம் செய்யும் பணியாளர் செல்வத்திடம் தொடர்பு கொண்டு பேசியபோது, 

திருவண்ணாமலையில் 5 மயானங்கள் உள்ளது மாரியம்மன் கோயில் தெரு, தேனிமலை, வேங்கிகால், கிரிவலப்பாதையிலும்  உள்ள மயானங்களில் அதிக அளவில் ஒரு நாளைக்கு 10-இல் இருந்து 15 வரை சடலங்கள். தற்போது உடல்களை எரிப்பதற்கு சாண வரட்டி திருவண்ணாமலை நகர் பகுதியில் வேட்டவலம் ரோடு திண்டிவனம் சாலை, சமுத்திர காலனி போன்ற பகுதியில் உள்ள வியாபாரிகளிடமிருந்து ஒரு வறட்டி 2 ரூபாய்க்கு  பெறப்பட்டு உடலை எரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2-வது அலை  கொரோனா  மற்றும் இயற்கையான மரணங்கள் போன்றவைகள் அதிகரித்துவந்த நிலையில் வியாபாரிகளிடம் எரிப்பதற்கு சாண வரட்டி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கிராமப் பகுதியில் சாண வரட்டி எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய்க்கு வாங்கி வரப்பட்டு எரிக்கப்படுகிறது இதில் ஒருவரின் உடலை எரிப்பதற்கு 300 முதல் 500 வரை வறட்டி தேவைப்படுகிறது. இதனால் தற்போது ஒரு உடலை எரிப்பதற்கு  ஐந்தாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. 

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

கொரோனா காலத்தில்  இதே நிலைமை தொடர்ந்து ஏற்பட்டால் உயிரிழப்புக்கள்  ஏற்பட்டால் அடுத்தபடியாக மரங்களை வெட்டி உடல்களை எரிக்கும் நிலைமை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

Tags: corana corona death cow dung cakes

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News :கேரளாவில் புதியதாக 14,424  நபர்களுக்கு கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News :கேரளாவில் புதியதாக 14,424 நபர்களுக்கு கொரோனா

கரூர் : தேங்கும் தடுப்பூசி பணிகள் : சுகாதாரத்துறை இணை இயக்குனரின் புதிய அறிவிப்பு!

கரூர் : தேங்கும் தடுப்பூசி பணிகள் : சுகாதாரத்துறை இணை இயக்குனரின் புதிய அறிவிப்பு!

School Education : அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

School Education : அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

செங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு!

Tamil Nadu NEET: நீட் பாதிப்பை ஆய்வுசெய்யும் ஏ.கே.ராஜன் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் : தமிழக அரசு நடவடிக்கை

Tamil Nadu NEET: நீட் பாதிப்பை ஆய்வுசெய்யும் ஏ.கே.ராஜன் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் : தமிழக அரசு நடவடிக்கை

டாப் நியூஸ்

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

கோவையில் 1049 ஹெக்டேர் அதிகரித்த வனப்பரப்பு : ஒரே மாதத்தில் சாத்தியமாக்கிய ஆட்சியர் நாகராஜன்

கோவையில் 1049 ஹெக்டேர் அதிகரித்த வனப்பரப்பு : ஒரே மாதத்தில் சாத்தியமாக்கிய ஆட்சியர் நாகராஜன்

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

கிராம வளர்ச்சி  திட்டம் தயாரித்த  மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !

கிராம வளர்ச்சி  திட்டம் தயாரித்த  மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !