மேலும் அறிய

ரயிலில் இந்த தவறுகளை செய்தால் அபராதம் மட்டுமல்ல.. சிறையும் காத்திருக்கிறது!

ரயில்வே விதிகளின்படி, ரயில்களுக்கு உள்ளேயும், குறிப்பிட்ட ரயில்வே வளாகங்களிலும் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொது நம்பிக்கை (திருத்தச்) சட்டம், 2026-இன் (Public Trust (Amendment) Act, 2026) கீழ் இந்திய ரயில்வே தனது விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகங்களில் புகைபிடித்தல், அனுமதியின்றி வியாபாரம் செய்தல் மற்றும் பிச்சை எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது, ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் விதிமீறல்களைக் குறைப்பதுமே இந்திய ரயில்வேயின் முக்கிய நோக்கமாகும்.

ரயிலில் இந்த தவறுகளை செய்தால் அபராதம் மட்டுமல்ல.. சிறையும் காத்திருக்கிறது!

ரயில்வே விதிகளின்படி, ரயில்களுக்கு உள்ளேயும், குறிப்பிட்ட ரயில்வே வளாகங்களிலும் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. புகைபிடித்து பிடிபடுபவர்களுக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே ஊழியர்கள் அந்தப் பயணியை ரயிலில் இருந்து இறக்கிவிடவும், அவர்களின் பயணச்சீட்டு அல்லது பாஸைப் பறிமுதல் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளனர். ஒருவேளை அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கலாம்.ரயில்வே வளாகத்தில் சட்ட விரோதமாக வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராகவும் புதிய விதிகள் கடுமையான நடவடிக்கைகளை வழங்குகின்றன.

முறையான உரிமம் (License) இல்லாமல் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அல்லது ரயில் நிலைய வளாகத்தில் யாசகம் பெருவோர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். புதிய சட்டத்தின்படி, மீண்டும் மீண்டும் இதே குற்றங்களைச் செய்பவர்களுக்கு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் இந்த தவறுகளை செய்தால் அபராதம் மட்டுமல்ல.. சிறையும் காத்திருக்கிறது!

சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு, நான்காவது முறையாக அல்லது அதற்கு மேல் குற்றவாளியாகக் கருதப்படுபவருக்கு 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ரயில்வே துறையின் உத்தரவுப்படி, பொது நம்பிக்கை (திருத்தச்) சட்டம், 2026-இன் கீழ் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு கீழ்ப்படிதலை அதிகரிக்கவும், ஒழுங்குமுறையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.

இத்தகைய கடுமையான அபராதங்கள் பயணிகளிடையே ஒழுக்கத்தை அதிகப்படுத்தும், பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் ரயில்வே வளாகத்தில் சிறந்த நிர்வாகத்தைப் பேண உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் இதுபோன்ற விதிமுறைகளைக் கடைபிடிப்பது பயணிகளின் பாதுகாப்புக்காகவே. அவற்றை பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதேபோல, ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்துக்காக நிறைய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ரயில்வே தொடர்பான முக்கியமான விதிமுறைகளை பயணிகள் அனைவரும் கடைபிடிப்பது நல்லது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget