Actor Sivakumar : "அன்று அவர் போட்ட விதைதான் காரணம்" - பெரியாரை போற்றிய நடிகர் சிவக்குமார்!
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருவதற்கு அன்று பெரியார் போட்ட விதைதான் காரணம் என்று நடிகர் சிவக்குமார் பேசியுள்ளார்.
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேரூராட்சி தலைவர் தேவி தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், "கோவையில் உள்ள சூலூருக்கும், சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. இதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான். தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினாரே தவிர, ஒருபோதும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை. ஒரு நாள் குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்த போது, தந்தை பெரியார் அவருக்கு சமமாக உட்கார மறுத்துவிட்டார்.
பெரியார் என்றுமே ஆதிக்க சக்தியை எதிர்த்தார். பிராமணீத்தை எதிர்த்தார். அப்பொழுதும் பிராமணர்களை வெறுக்கவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சிவக்குமார்," ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.ஆர்.எஸ், மருத்துவர், இன்ஜினியர் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருவதற்கு அன்று பெரியார் போட்ட விதைதான் காரணம். காலங்கள் செல்ல செல்ல பெரியார் மீது மரியாதை கூடிக் கொண்டே செல்கின்றது. இருப்பினும் அவர் மீது ஒரு புறம் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார்.
நடிகர் சிவக்குமார் உரையாற்றியதற்கு பிறகு, தமிழ்நாடு அரசின் விருதுகள் பெற்ற ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்