உலக சாதனை படைத்த குகேஷ்.. சர்ப்ரைஸ் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.. வாவ்!
Champion Gukesh: குகேஷை பாராட்டும் விதமாக, உயரிய ஊக்கத்தொகையாக 75 லட்சம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் அவருக்கு வழங்கினார்.
FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
குகேஷ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர்:
கனடாவின் டொரொண்டோவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் டோர்ன்மெண்டில், தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது வீரரான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து இந்த பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் படைத்தார்.
கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இளம் வயது வீரர், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனைகளையும் குகேஷ் படைத்து செஸ் வரலாற்றில் தடம் பதித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் குகேஷ் இன்று சந்தித்தார்.
குகேஷை பாராட்டும் விதமாக, உயரிய ஊக்கத்தொகையாக 75 லட்சம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் அவருக்கு வழங்கினார்.
இளம் வயது சாதனைகள்:
கடந்த 2015ம் ஆண்டு 9 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான, ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார். தொடர்ந்து, 2018ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக இளம் விரர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கினார்.
பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை குவித்த அவர், மார்ச் 2018-இல் 34 வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான புள்ளிகளை பெற்றார்.
கிராண்ட் மாஸ்டர் ஆன குகேஷ்:
12 வயது ஏழு மாதங்கள் 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். அதன் மூலம் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். செஸ் ஒலிம்பியாடில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2700-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றார். இதன் மூலம், செஸ் உலகில் இளம் வயதில் 2700 புள்ளிகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குகேஸ் பெற்றார். அதோடு, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனயை, 2022ல் குகேஷ் படைத்தார்.
ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும், குகேஷ் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: CSK Vs SRH, IPL 2024: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? சேப்பாக்கத்தில் ஐதராபாத் உடன் இன்று மோதல்