BREAKING: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தினேன் - கோரிக்கைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்
பிரேக்கிங் செய்திகளை உடனக்கு உடன் வழங்கும் லைவ் பிளாக் பகுதி இது. உடனடி செய்திகளை வரிசை முறையில் இப்பகுதியில் நீங்கள் அறியலாம்.

Background
நடிகர் ரஜினிகாந்த், உடல் நல பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக நாளை மறுநாள் ஜூன் 19 ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு 3 மாதங்கள் தங்கும் ரஜினிகாந்த், உடல் முழு பரிசோதனை செய்து முடித்த பின்பாக இந்தியா திரும்புகிறார். அவர் நடித்து வந்த அண்ணாத்தா படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், ரஜினி காந்த் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் ஸ்டாலின்..!
நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். தடுப்பூசிகள் தேவையான அளவுக்கு தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்..!
பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்..!
டெல்லியில், பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்..!





















