கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஆண்கள் மட்டும் 22 பேரை போலீசால் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமத்தில் தார் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பலமுறை போராட்டம் நடத்தியும், 62 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் பதாகை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் 22 பேர் மட்டும் வலுக்கட்டாயமாக போலீசாரால் கைது செய்து காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளான குழந்தைகளை கைது செய்ய மறுத்து போலீசார் விட்டுச் சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் பகுதியில் 20 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் 20 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் ரெட்டியபட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இப்பணியை உடனடியாக துவங்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடந்து மறியலை தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்படுத்தி குடிநீர் மற்றும் சாலையை சரி செய்து கொடுக்க என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அதிகாரிகள் வாக்குறுதியின் அடிப்படையில் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.





















