அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டை ஓபிஎஸ்; டிடிவி இல்லாவிட்டால் ஓபிஎஸ் இல்லை- ஜெயக்குமார்
அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டையான ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார்.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்ததுதான் 90 சதவீதம் இணைப்பு என்று எதுவும் இல்லை. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு துரோகம்
அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டையான ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார்.
ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கிடையாது. TTV இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது. பொறுப்பு கொடுத்த அதிமுக கட்சி அலுவலகத்தையே சென்று இடித்து உடைத்திருக்கிறார் ஓபிஎஸ். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைக்கிறோம். ஆனால் கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்ததுதான் 90 சதவீதம் இணைப்பு என்று எதுவும் இல்லை. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை.
ஒரே மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள்
தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்படுகிறார்.
தமிழக அரசு இருக்கிறதா?
முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் பிரச்சனை இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாற்றினால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும். விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்கக் கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: அண்ணாமலை வேதாளம் அதிமுகவை விட்டுட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறுகிறது: ஜெயக்குமார் தாக்கு!