மேலும் அறிய

ADMK's Digital Plan: ஆஹா.. செம்ம பிளானா இருக்கே.. திமுகவை வீழ்த்த அதிமுக கையிலெடுக்கும் டிஜிட்டல் வியூகம்..

எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் வியூகம் தான் முக்கியம். அந்த வகையில், திமுக-வை வீழ்த்த, அதிமுக ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளது. இதனால், இணையம் அதிரப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசிய்ல கட்சிகளை எடுத்துக்கொண்டால், தற்போது டிஜிட்டல் யுகத்தில் முந்தி நிற்பது திமுக தான். மிகவும் வலுவான ஒரு ஐ.டி விங்கை வைத்திருக்கும் திமுகவை எதிர்கொள்ள, அதிமுகவும் அதன் ஐ.டி விங்கை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளாம். தேர்தலுக்கு முன்பாக, முதலில் இணையத்தில் திமுகவை தோற்கடிப்பதே இபிஎஸ்ஸின் புதிய வியூகம் என்று கூறப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் போர்

தற்போதெல்லாம், ஒரு செய்தியை விரைவாக கொண்டு சேர்ப்பது மிகவும் எளிதாகிவிட்டது. முன்புபோல், பொதுக்கூட்டம், துண்டு பிரசுரம், போஸ்டர் என்று நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. இணையத்தில் அந்த செய்தியை பரவ விட்டாலே போதும். அது வைரலாகி, உலகம் முழுக்கவே சென்று சேர்ந்துவிடும்.

இப்படிப்பட்ட இந்த காலத்தில், அரசியல் கட்சிகளும் அதே பாணியைத் தான் கையாள்கின்றன. ஆவேசமாக பேட்டி கொடுப்பது, எக்ஸ் தளம் போன்றவற்றில் பதிவுகளை போடுவது என, எல்லா கட்சிகளுமே பிசியாகத் தான் உள்ளன. ஆனாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை அந்த ரேஸில் முந்தி நிற்பது திமுக தான். அதன் ஐ.டி விங்கின் வீரியம் அனைவரும் அறிந்ததே.

திமுகவின் பிரதான எதிரியான அதிமுக, அதில் சற்று தொய்வாகவே உள்ளது. தங்கள் ஆட்சி காலத்தில் செய்ததை மக்களிடம் கொண்டு சேர்த்தால் தான், தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். ஆனால், அந்த வேலைகளில் அதிமுகவின் ஐ.டி விங் சற்றும் மந்தமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக தலைமை ஐ.டி விங்கை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு

ஒரு வருடத்தில் தேர்தல் வருவதால், அதற்கு முன்னதாக, டிஜிட்டலாக திமுகவை வெல்ல வேண்டும் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் தற்போதுதான் உணர்ந்திருப்பதாக தெரிகிறது. அதனால், அதிமுகவின் ஐ.டி விங்கை பலப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளாராம்.

சில மாதங்களுக்கு முன்பே, தங்களது ஐ.டி விங்கிற்கு சில டிப்ஸ்களை கொடுத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. அதாவது, தமிழ்நாட்டிற்காக அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல திட்டங்களை மறைக்கும் வகையில் பதிவுகளை இட்டுவரும் திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதானாம் அது.

திறமையாளர்களை தேடிப் பிடிக்கும் அதிமுக ஐ.டி விங்

இதையடுத்து, ராஜ் சத்யன் தலைமையில் இயங்கிவரும் அதிமுக ஐ.டி விங், திறமையான டிஜிட்டல் கிரியேட்டர்களை தேடிப் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளதாம். இதற்காக, திறமையுடனும், கருத்தியல் ரீதியாக ஒத்துப்போகும் வகையிலும் இருக்கும் இளைஞர்களை ஐ.டி விங்கில் பணியமர்த்த, தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொகுப்பாளர்கள், செய்தி எழுதுபவர்கள், நெறியாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வானோரை வைத்து, கட்சியின் மூத்த தலைவர்களை பேட்டி எடுத்து, நிகழ்ச்சியாக தொகுத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அதேபோல், இணையத்தில் திமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்யவும் அவர்களை வைத்து, தரமான செய்திகள், கலந்துரையாடல்களையும், திமுக ஆட்சியில் நடக்கும் தவறான நிர்வாகத்தை எடுத்துரைக்கும் வகையிலான தொகுப்புகளையும் தயாரித்து வெளியிட உள்ளனராம்.

அதிமுகவை சிதறடிக்கும் திமுக ஐ.டி விங்

இதுவரையிலுமே, ஐ.டி விங்கை பொறுத்தவரை, திமுகவின் கையே ஓங்கியுள்ளது. திமுகவின் சாதனைகள் என இணையத்தில் அவர்கள் போடும் ஏராளமான பதிவுகள் மக்கள் மத்தியில் சென்றடைகின்றன. அதேபோல், அதிமுகவை பங்கமாக்கும் விஷயத்திலும் திமுகவின் ஐ.டி விங் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

இதையெல்லாம் எதிர்கொள்ளும் விதமாக தயாராகிவருகிறதாம் அதிமுக ஐ.டி விங். சமீபத்தில் ‘யார் அந்த சார்‘ என்று அவர்கள் போட்டி இணைய பதிவு வைரலாக சென்றது. ஆனாலும் இது போதாது என்பதாலேயே, தற்போது ஐ.டி விங்கை புதுப்பிக்கு பணிகளில் இறங்கியுள்ளது அதிமுக. பிறகென்ன, இனி இணையம் அதிரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget