Actor Vijay: அரசியலா...? பொதுசேவையா? - இரவு பாடசாலை தொடங்குகிறார் நடிகர் விஜய்...! அடுத்த அதிரடி
நடிகர் விஜய் தனது அரசியல் நகர்வின் அடுத்தக்கட்டமாக இரவுநேர பாடசாலைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தனது அரசியல் நகர்வின் அடுத்தக்கட்டமாக இரவுநேர பாடசாலைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய், விரைவில் அரசியலுக்கு வருவது உறுதி என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் அரசியல் அடியையும் எடுத்து வைத்து வருகிறார். மக்கள் இயக்கத்தினர் வேறு அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடாது என உத்தரவிட்டது தொடங்கி, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, நற்பணிகள் செய்வது என மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து ஆக்டிவ் ஆக உள்ளனர்.
அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் இரவுநேர பாடசாலைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. எனவே அன்றைய இந்த ’இரவு பாடசாலை திட்டமானது தொடங்குகிறது. இலவச இரவு பாட சாலை திட்டத்திற்கான இடம் ஏற்பாடு செய்து தரப்படுவதோடு, அதற்கான வாடகை மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கு தகுதியான ஆசியரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்பு முடிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தப்பட்சம் 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் போன்ற திட்டங்களை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில், ‘தான் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்’ என்று விஜய் சொன்னதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.