மேலும் அறிய
Advertisement
‛சிவசங்கர் பாபா தங்கமானவர்...’ ஆதரவு நீட்டும் நடிகர் சண்முகராஜா!
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது தற்போது போக்கோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் சண்முகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறிய இரு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபா, தான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா மீதும் மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் 354, 355, 363, 365 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வண்டலூர் அருகே செய்தியாளரை சந்தித்த பிரபல நடிகர் சண்முகராஜன், சிவசங்கர் பாபா விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகராஜன், கடந்த நான்கு ஆண்டுகளாக சிவசங்கர் பாபாவுடன் இருந்து வருகிறேன் . ஏழு நூல்களை சிவசங்கர் பாபா பெயரில் தொகுத்துள்ளேன் சிவசங்கர் பாபாவைப் பற்றி 236 ஆளுமைகள் கூறியதை குறித்து தொகுத்துள்ளேன். கடந்த 20 நாட்களாக 176 வீடியோக்கள் பாபா அவர்கள் பாலியல் குற்றவாளி என வெளியிட்டு வருகிறார்கள். அவர் பாலியல் குற்றவாளி என்று கூறுவதில் ஒரு துளிகூட உண்மை கிடையாது. அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் பொய்.
இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்கு காரணமானவர்கள் முன்னாள் பள்ளி மாணவர்கள் தான், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பள்ளியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள்தான் இந்த பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடந்த விவகாரத்தைப் பயன்படுத்தி சிவசங்கர் பாபா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். அவர்களுக்கு உண்மையில் அங்கு இருக்கும் சில ஆசிரியர்கள் மற்றும் அட்மின் மீதுதான் கோபம். ஆனால் அதை அவர்கள் திசை திருப்பியுள்ளனர். சிவசங்கர் பாபாவிற்கு ஜாதி மதங்கள் கிடையாது அவர் பெண்கள் விஷயத்தில் செல்வது கிடையாது. சிவசங்கர் பாபா இந்து பிராமண வகுப்பை சார்ந்தவர் என்றாலும் பள்ளியில் அனைத்து மதத்திற்கான கோவில்களை கட்டி வைத்துள்ளார். சிவசங்கர் பாபாவின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளால் பக்தர்கள் தற்போது மன உளைச்சலில் இருக்கிறார்கள். 50 லட்சம் நபர்கள் அவருடைய பக்தர்களாக இருந்து வருகிறோம். அனைவரும் வெளியில் வந்து பேசுவதற்கு தயாராக உள்ளோம். 24 மணி நேரமும் அன்னதானம் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார். அவருக்கும் பள்ளிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சண்முகராஜன் வறுமையில் இருப்பவர்கள் அவரிடம் வந்து உதவி கேட்டால் அவர்களுக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். பல கலப்பு திருமணங்களை செய்து வைத்துள்ளார். 72 வயதாகும் அவர் இன்னும் 4 வருடத்தில் இந்த உடலை விட்டுச் சென்று விடுவேன் என கூறி வருகிறார். அப்படிப்பட்ட ஒருவர் மீது அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் வைத்திருப்பது மிகவும் மோசம். திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இரண்டு தரப்பையும் விசாரித்து சரியான முடிவுக்கு அரசு மற்றும் காவல் துறையினர் வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது
சிவசங்கர் பாபா தன்னைக் கடவுள் என்று கூறி வந்த நிலையில் அவர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்னாள் பள்ளி மாணவர்கள் வைத்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் பேசியிருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion