Watch Video: ஏபிபி நாடு செய்தி எதிரொலி - மாற்றுத்திறனாளிக்கு கிடைத்த உதவி
”லெட்சுமணன் மற்றும் அவரது சகோதரியின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கூடுதல் உதவி தேவைப்படுகிறது. எனவே லெட்சுமணனுக்கு கூடுதல் உதவிகளை மற்ற நண்பர்கள் செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமன்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் லெட்சுமணன் உடல் நலக் கோளாறு காரணமாக தவித்து வருகிறார். லெட்சுமணன் குடும்பம் வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டார். அதனையடுத்து கோவையில் இருக்கும் பஞ்சர் கடையில் வேலை செய்யும்போது சக தொழிலாளியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுவிட்டது. இதனால் கோமாவிற்கு போனார். நல்வாய்ப்பாக அவர் சில வாரங்களில் நினைவு திரும்பிவிட்டார்.


#Abpnadu மாற்றுத்திறனாளி லெட்சுமணனுக்கு கிடைத்த உதவி கூடுதல் உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை.#sivagangai | #thirumanpatti | #help | @SivagangaiDist | @KartiPC `| @OfficeOfKRP | @s_mangudi | @DrSenthil_MDRD | @reportervignesh | @kthirumani pic.twitter.com/YxouDyBhuA
— Arunchinna (@iamarunchinna) February 7, 2022

#Abpnadu சிவகங்கை மாவட்டம் திருமன்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் லெட்சுமணனுக்கு உதவி கிடைத்தது. கூடுதல் உதவி செய்ய தன்னார்வலர்கள் கோரிக்கை.#Abpnadu | #sivagangai | #help | #house | @KartiPC | @OfficeOfKRP @SivagangaiDist | @actor_jayamravi | @Vijayabaskarofl @CMOTamilnadu pic.twitter.com/APFLt8FJ36
— Arunchinna (@iamarunchinna) February 7, 2022





















