புத்தாண்டு ராசிபலன் - ரிஷப ராசி 2026
இந்த 2026 உங்களுக்கு ஜாக்பாட் வருடமாக அமையும்

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே,வரக்கூடிய 2026 உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்...
வருடம் முழுவதுமான கிரக நிலைகளை இரண்டாகப் பிரிக்கலாம்... ஒன்று குருபகவான் மே மாதத்திற்கு பிறகு மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்... மற்றொன்று ராகு பகவான் பின்னோக்கி உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... சனி பகவான் 11 ஆம் பாவத்தில் இருக்கிறார்... இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது இந்த 2026 உங்களுக்கு ஜாக்பாட் வருடமாக அமையும் என்று எடுத்துக் கொள்ளலாம்... ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானமான 10 ஆம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்.... உங்களுடைய வியாபாரத்திற்காக சிறிய பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் கூட நீங்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் பொழுது உங்களுக்கு நல்ல லாபமும் அதன் மூலம் நன்மையும் ஏற்படும்...
. ஜனவரி மாதத்தில் தனுசு ராசியில் இருந்து செவ்வாய் பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்... இந்த காலகட்டத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் நிலையை வைத்து உங்களுடைய பாக்கியத்தை அவர் கொண்டு வருவதற்கு வாய்ப்பு உண்டு... அதாவது ஏழாம் அதிபதி 9ஆம் வீட்டில் உச்சம் பெறும் பொழுது வியாபார நண்பர்கள் மூலமாகவோ, அல்லது வாழ்க்கைத் துணையின் மூலமாகவோ நல்ல சிறப்பான பலன்கள் உங்களுக்கு நடைபெறும்... வருடத்தில் முதல் ஆறு மாதம் குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... நீங்கள் பேசுகின்ற பேச்சு நல்ல ஞானம் உள்ளதாக இருக்கும் என்று உங்களுடைய வட்டாரத்தில் பேசப் போகிறார்கள்... சம்பாத்தியம் உயரும் காலகட்டம்... எவ்வளவு சம்பாதித்தாலும் வங்கியில் சேமிப்பு இல்லை என்று கஷ்டப்படும் நண்பர்களே இந்த ஜனவரி முதல் மே மாத இறுதிவரை உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.... இரண்டு வேளை பார்த்தாலும் கூட அந்த இரண்டு வேலையிலுமே வருமானம் வர வாய்ப்பு உண்டு...
மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்களுடைய மூன்றாம் வீட்டில் பயணிக்க போகிறார்... சகஜமாக விட்டு சென்ற பழைய நண்பர்களாகட்டும் தொழில் கூட்டாளிகள் ஆகட்டும்.. அனைவரிடத்திலேயுமே மீண்டும் தொடர்பு கிடைக்கும்... நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சின் மூலமாக அது வருமானமாக மாறும்... போதிய அளவிற்கு பணம் உங்களிடம் புழக்கத்தில் இருக்கும்... லாப ஸ்தானத்தின் அதிபதி மூன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் கொடிகட்டி பறக்கலாம்... ஒரு பொருளை வாங்கி விற்க வேண்டும் அல்லது மக்களிடத்தில் அந்த பொருளை சேர்க்க வேண்டும் என்று வேலையாக எடுத்துச் செய்யும் ரிஷப ராசி அன்பர்களே... பதவி உயர்வு உங்களை தேடி வரும்.... அதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்... திடீர் தன வரவை கொண்டு வரும் குரு பகவான் உங்களுடைய வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பொழுது யாரோ சம்பாதித்த பணமாக கூட இருக்கலாம் அவை உங்கள் கைகளுக்கு வர வாய்ப்பு உண்டு... ஆனால் உழைப்பின் மூலமாக வருகின்ற பணம் நீண்ட நாளைக்கு நிலைத்திருக்கும் என்பது உண்மை... நான்காம் வீட்டில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார்.. உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும்... சதை பிடிப்பு, காஸ்ட்ரிக் பிரச்சனை, காது கழுத்து கைகள் போன்ற இடங்களில் வலி அல்லது பிரச்சனை... இவைகளில் இருந்து தப்பிக்க ஆலயங்களில் இருக்கக்கூடிய நவகிரக குரு பகவானை வழிபடுங்கள்... புதிய வாகனம் வாங்கி பழைய வாகனம் விற்க வாய்ப்பு உண்டு.... இடம் மாறவும் வாய்ப்பு அதிகம்... சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்து மிகப் பெரிய வாய்ப்புகளை உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப் போகிறார்...
உங்களுடைய உழைப்பின் மூலமாக உங்களுக்கு பெயர் புகழ் கிடைக்கும்... ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் எவ்வளவு அதிகமாக உழைக்கப் போகிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் அளவிற்கு உங்களுடைய உழைப்பு தற்போது இருக்கப் போகிறது... உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் கஷ்டங்கள் நீங்கி செல்வங்கள் உயரும்...





















