முடிவுக்கு வந்த 6 நாள் போராட்டம்: நகர்ந்தது ‛எவர்க்ரீன்’
சூயஸ் கால்வையின் குறுக்கே சிக்கியிருந்த தைவம் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் ‛எவர்க்ரீன்’ தற்போது மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

உலக புகழ்பெற்ற சூயஸ் கால்வையின் குறுக்கே கடந்த 6 நாட்களுக்கும் மேலாக சிக்கியிருந்த தைவம் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் தற்போது மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. சுமார் 1300 அடி நீளமும் 2 லட்சம் மெட்ரிக் டன் எடையும் கொண்டதுதான் எவர்க்ரீன் சரக்கு கப்பல். தைவான் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்படும் எவர்க்ரீன் மெரைன் கார்ப் நிறுவனத்தின் இந்த சரக்கு கப்பல், கடந்த செவ்வாயன்று (மார்ச் 23) சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியது குறிப்பிடத்தக்கது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The boat that was stuck in the Suez Canal is floating!!! <a href="https://t.co/WAYC8p8MdZ" rel='nofollow'>pic.twitter.com/WAYC8p8MdZ</a></p>— Barstool Sports (@barstoolsports) <a href="https://twitter.com/barstoolsports/status/1376384697413087232?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
தற்போது எகிப்தில் நிலவும் கடுமையான சீதோஷண நிலமையால் கால்வாயின் குறுக்கே சிக்கியிருந்த கப்பலை அகற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 6 நாட்கள் கடும் முயற்சிக்கு பிறகு தற்போது மீண்டும் கப்பல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

