மேலும் அறிய
Advertisement
எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு? - வானதிக்கு செந்தில் குமார் எம்.பி கேள்வி
’’23 ஆம் புலிக்கேசி என்ற வரலாற்று சிறப்புமிக்கப்படத்துடன் என்னை ஒப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி’’
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஔவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 லட்சம் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்த பிறகு பள்ளி கல்வி இடைநிற்றல் அதிகரிப்பதற்கு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணமாக அமைந்துள்ளது. எனவே இடைநிற்றலை தவிர்க்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பள்ளி கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக செய்திருக்கின்றேன்.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுரி எம்பி ட்விட்டா் எம்பி என்று குறிப்பிட்டிருக்கிறார் என்ற கேள்விக்கு.
ட்விட்டா் மூலமாக நல்ல விஷயங்கள் செய்ய முடிகிறது. என் பாராளுமன்ற செயல்பாடு மாநில அளவிலும் மத்திய அளவிலும் முதல் இடத்தில் இருக்கின்றேன். ட்விட்டரில் மற்றவர்களுக்கு உதவுவதில் மற்றவர்களைக் காட்டிலும் முதலிடத்தில் இருக்கின்றேன். பாஜக எம்பி எம்எல்ஏ செயல்பாடுகளும், தருமபுரி எம்பி அதன் செயல்பாடும் பொருத்தி பார்த்தால் முதலிடத்தில் வருவேன்.
மேலும் எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என எழுதி பணம் என்னும் இயந்திரத்தை வைத்திருக்கின்ற கட்சி தான் பாஜக. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இதற்கு பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு என கேள்வி எழுப்பினார். என்னை இருபத்தி மூன்றாம் புலிகேசி என்று பேசியிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தை ஒப்பிட்டு பாராட்டியிருக்கிறார் இதனை நான் நல்ல விதமாக தான் எடுத்து கொள்கிறேன். இதனால் முதலில் நான் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் தருமபுரியில் 289 பூத் குரும்பட்டியான் கொட்டாய் பகுதியில் பேசிய அண்ணாமலை தோ்தலில் இந்த பூத்தில் 90% பாஜக வாக்கு பெற்றுள்ளதாக பேசியிருக்கிறார். அந்த வாக்குச் சாவடியில் பாஜகக்கு ஒரே ஓட்டுதான் பெற்றுள்ளது. அந்த பூத் பாட்டாளி மக்கள் கட்சி கோட்டையாக உள்ள இடம். பாஜகவிற்கும் பாமகவிற்கு வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆறு மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில், அனைத்து மாதங்களில், அனைத்து மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வனத் துறையினர் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். விரைவில் அனுமதி கிடைத்தவுடன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை வசதி பெற்ற கிராமங்களாக இருக்கும் என்று தெரிவித்தார். அதியமான் கோட்டை மேம்பால பணிகள் குறித்து ஏற்கனவே டெல்லியில் உள்ள அலுவலரிடம் அலுவலரிடம் பேசியதாகவும் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகத்தின் அவர் பதில் அளித்ததாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion