Salem Power Cut : சேலம் மக்களே உஷார்! நாளை மின்தடை... உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா செக் பண்ணுங்க...
Salem Power Cut (20-01-2026): சேலம் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் : சேலம் மாவட்டத்தில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை 20.01.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்:
கொங்கணாபுரம், ரங்கம்பாளையம், ராக்கியாம்பட்டி, மடத்தூர், எருமப்பட்டி, மூலப்பாதை (ஒரு பகுதி), மற்றும் தூங்கனூர்.
வெள்ளக்கல்பட்டி, ரெட்டிப்பட்டி, காட்டூர், காவடிக்காரனூர், இ.கே.வலவு, அம்மன் காட்டூர், மற்றும் ஆலாக்காட்டூர்.
ஆடையூர் துணை மின்நிலையப் பகுதி:
ஓட்டப்பட்டி, குண்டானூர், செட்டிமாங்குறிச்சி, அம்மன் கோவில், இருப்பாலி, மற்றும் பக்கநாடு.
ஆடையூர் (ஒரு பகுதி), அடுவாப்பட்டி, ஆனைப்பள்ளம், கல்லுரரல்காடு, மற்றும் குண்டுமலைக்காடு.
ஜலகண்டாபுரம் துணை மின்நிலையப் பகுதி:
வங்காலியூர், தோரமங்கலம், கரிக்காப்பட்டி, கருணை நகர், காப்பரத்தாம்பட்டி, டி.தோரமங்கலம், குட்டிகண்ணன் தெரு, நரியம்பட்டி, மற்றும் தாசனூர், காளியம்மன் கோவில், நேரு நகர், நாச்சம்பட்டி, செலவடை மேடு, செலவடை, வெண்ணானம்பட்டி, காட்டம்பட்டி, இந்திரா நகர், பனங்காட்டூர், பழக்காரனூர், நொரச்சிவலவு, வைரன் ஏரி மற்றும் மலையம்பாளையம் காட்டுவலவு (ஒரு பகுதி).
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 5:00 மணிக்கு மேல் மின் விநியோகம் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த மின் மாற்றத்திற்குத் தகுந்தவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















