மேலும் அறிய
Advertisement
தருமபுரி: பொதுமக்கள் முயற்சியால் 17 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அரூர் பெரிய ஏரி
17 ஆண்டுகளுக்குப் பிறகு அரூர் பெரிய ஏரி நிரம்பி, இருகால்வாயிலும் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது
தருமபுரி மாவட்டம் வாணியாறு அணை உபரி நீர் தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீரும் கள்ளாறில் வெளியேறி கொளகம்பட்டி, காரை ஓட்டு என்ற இடத்தில் சிறிய தடுப்பணை கால்வாய் மூலம் நிரம்பும் வகையில் 165 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வந்தடையும். அரூர் பெரிய ஏரி ஒருமுறை தண்ணீர் நிரம்பினால் 3 ஆண்டுக்கு அரூர் நகரம், தொட்டம்பட்டி, நாசினாம்பட்டி, பச்சினாம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் மற்றும் குடிநீர் பிரச்சினை தீரும். ஆனால் காரை ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், ஏரிக் கால்வாயில் தண்ணீர் திரும்பாமல், நேரடியாக தண்ணீர் வாணியாற்றில் சென்று வந்தது.
இதனால் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் உதவியுடன், அழகு அரூர் தன்னார்வ அமைப்பினர் மற்றும் அரூர் பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வீணாக வெளியேறும் தண்ணீரைத் தடுத்து அரூர் பெரிய ஏரிகால்வாய்க்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால், அதிகமாக வந்தது. கடந்த 10 நாட்களாக தண்ணீர் வந்த நிலையில், இன்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரூர் பெரிய ஏரி நிரம்பி, இருகால்வாயிலும் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதல், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உபரி நீர் வெளியேறுவதை மலர் தூவி வரவேற்றனர். மேலும் கார ஓட்டு தடுப்பணையில் உயரத்தை உயர்த்தி, ஏரிக்கு நிரந்தரமாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 1100 மூட்டை மஞ்சள் 55 லட்சத்திற்கு விற்பனை
தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் பருத்தி ஏலமும், வெள்ளிக் கிழமைகளில் மஞ்சள் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அரூர் பகுதியில் உள்ள அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய மஞ்சள் மற்றும் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 137 விவசாயிகள் கொண்டு வந்த 1100 மூட்டை மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் குண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.7301 முதல் 8009 வரையும், விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.7499 முதல் 9299 வரை விற்பனையானது. நேற்றைய ஏலத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 1100 மூட்டை மஞ்சள் ரூ.55 லட்சத்திற்கு விற்பனை ஆனது. கடந்த வார்த்தை விட, இந்த வாரம் விவசாயிகள் மற்றும் மஞ்சள் வரத்து குறைந்ததால், மஞ்சள் விலை உயர்ந்து ஏலம் போனது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion