மேலும் அறிய
Advertisement
தாய்லாந்துக்கு பறக்கும் தருமபுரி பேரிச்சை செடிகள்...! - மதியால் மசூலை பெருக்கும் விவாசாயி..!
’’இந்த பேரிட்சை செடிகள் 3500 முதல் 6000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திசு வளர்ப்பு பேரிச்சை செடிகளை அதிகப்படியாக ஆன்லைன் மூலம் விற்பனையாகிறது’’
தருமபுரி அருகே உள்ள அரியகுளம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக திசு வளர்ப்பு பேரிச்சை விவசாயம் செய்து நிஜாமுதீன் என்ற விவசாய அதிகப்படியான இலாபம் ஈட்டி வருகிறார். இதில் பர்ஹி ரக பேரிச்சையில் ஒரு மரத்திற்கு சுமார் 300 கிலோ வரையில் மகசூல் கிடைக்கிறது. இதனையறிந்த விவசாயிகள் இந்த பேரிச்சை விவசாயத்தை நேரில் பார்த்து, குறைந்த பராமரிப்பு செலவு, தண்ணீர் தேவை குறைவு என்பதால், பேரிச்சை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.
அரியகுளத்தில் உள்ள விவசாயி நிஜாமைதீன் திசு வளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்ட பேரிச்சை செடிகளை வாங்கி வந்து தனது சொந்த நிலத்தில் உள்ள நாற்று பண்ணையில் பதியம் போட்டு பராமரித்து வருகிறார். இந்த செடிகள் ஆய்வகத்திலிருந்து கொண்டு வந்து சுமார் இரண்டு ஆண்டுகள் நாற்றுப் பண்ணையில் வைத்து முறையாக பராமரிக்கப்பட்ட பிறகே விற்பனை செய்யப்படுகிறது. இந்த செடிகள் விற்பனை செய்யும்போது, 3 அடி கூட இருக்காது. அரபு நாட்டில் சாகுபடி செய்யும் ரக பேரிச்சை செடிகள் நமது மண்ணிலும் வளரும் தன்மை கொண்டதா? என ஒரு சில விவசாயிகள் முதலில் ஓரிரு செடிகளை மட்டுமே வாங்கி சென்று விவசாய நிலத்தில் வைத்துள்ளனர். அது நன்றாக வளர்கிறதா? மகசூல் கிடைக்கிறது என பார்த்து விட்டு பிறகு மீண்டும் வந்து அதிகப்படியான செடிகளை வாங்கி செல்வதாக விவசாயி நிஜாமுதீன் தெரிவிக்கிறார்.
இந்த செடிகள் 3500 முதல் 6000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திசு வளர்ப்பு பேரிச்சை செடிகளை அதிகப்படியாக ஆன்லைன் மூலம் விற்பனையாகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்பொழுது அரியகுளம் பகுதியில் உள்ள திசு வளர்ப்பு பேரிச்சை பழ செடிகள் நாற்று பண்ணையிலிருந்து, பர்ஹி ரக பேரிச்சை செடிகள் தாய்லாந்திற்கு, விமானம் மூலம் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பண்ணையிலிருந்து ஒரு அட்டை பெட்டிகளுக்கு சுமார் 20 செடிகளை வைத்து, எந்த பாதிப்புகளும் இல்லாமல், பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
தொடர்ந்து தருமபுரியிலிருந்து தனி லாரிகள் மூலம் பெங்களூர் விமான நிலையம் கொண்டு செல்லப்படுகிறது. இதனையடுத்து பெங்களூரிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த திசு வளர்ப்பு பேரிச்சை பழ செடிகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. வெளி மாநில, வெளி நாடு விவசாயிகள் திசு வளர்ப்பு பேரிச்சை செடிகளை சாகுபடி செய்கின்றனர். மேலும் வெளிநாட்டில் உள்ள சில விவசாயிகள், பேரிச்சை செடிகளை விற்பனையும் செய்கின்றனர். இதனை தமிழக தோட்ட கலை துறை ஆய்வு செய்து, தமிழக விவசாயிகளுக்கு மாநிய விலையில் செடிகளை வழங்கி விரிவுப்படுத்தினால் விவசாயிகள் அதிக லாபம் எடுக்க முடியும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion