மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு
காலையில் பள்ளிக்கு செல்ல, குளித்துவிட்டு வந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம்-அருணா தம்பதியரின் மகன் ஏழுமலை, அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக குளித்துவிட்டு, வீட்டருகே இருந்த கம்பியின் மீது துணியை காய போட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் உடல் அரூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்த வந்த அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சிதம்பரம் வீடு முழுவதும் மின் கசிவு ஏற்பட்டு, துணி காய வைக்கும் கம்பியில் மின்சாரம் இருந்ததாக கூறப்படுகிறது. காலையில் பள்ளிக்கு செல்ல, குளித்துவிட்டு வந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பேருந்து படிகட்டில், ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்-காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி மற்றும் சோளக்கொட்டாய், தருமபுரி அரசு பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ராணிமைந்தன, பாசாரப்பட்டி, ஒடசல்லப்பட்டி செம்மணஹள்ளி, நடுப்பட்டி, பயந்துட்டு உள்ளிட்ட பகுதிகளில இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் இருந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். இந்த மாணவர்கள் காலையில் செல்வதற்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே உள்ளது. தருமபுரியில் இருந்து ஒடசல்பட்டி, ராணிமைந்தன, சிந்தல்பாடி வழியாக ராமியணள்ளி வரை அரசு பேருந்து தடம் எண் 12 பி செல்கிறது. இந்த பேருந்து ராமியணஹள்ளியிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த பேருந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சரியாக இருப்பதால், பாசரப்பட்டி, ராணிமூக்கனூர் உள்ளிட்ட கிராமத்தில் இருந்து ஒடசல்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வருகின்றன்றனர். மேலும் சோளக்கொட்டார் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு செல்ல, செம்மணஹள்ளி, நடுப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் பேருந்துக்கு வருகின்றனர்.
இதனால் பேருந்தில் பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரித்துவிடுறது. இந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொடங்கி, ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படியில் தாங்க வேண்டாம் என்று சொன்னாலும் கூட, மாணவர்கள் கண்டு கொள்ளாமல், சாகசம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து பேருந்தில் கூட்டம் அதிகரிப்பதால், சில பேருந்து நிறுத்தங்களில், பேருந்து நிறுத்துவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் காத்திருந்து அடுத்த பேருந்துக்கு செல்கின்றனர். இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்லமுடியாத நிலையும் இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி, காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion