மேலும் அறிய
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்..
டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, குடியரசுத் தலைவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் மாற்றப்பட்டுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் நலமுடன் இருப்பதாகவும் ராணுவ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















