மொட்டையடித்து யாகம் வளர்த்த பாஜக எம்.எல்.ஏ.,- கட்சியிலிருந்து வெளியேறுவதாகக் காட்டம்!
”எதிர்வரும் காலத்தில் என்னைப் போன்ற பல பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் சேருவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
![மொட்டையடித்து யாகம் வளர்த்த பாஜக எம்.எல்.ஏ.,- கட்சியிலிருந்து வெளியேறுவதாகக் காட்டம்! Tripura BJP MLA ashish das tonsures head quits from the party மொட்டையடித்து யாகம் வளர்த்த பாஜக எம்.எல்.ஏ.,- கட்சியிலிருந்து வெளியேறுவதாகக் காட்டம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/05/7a52e0c6fb7dc61685e788da875c3317_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திரிபுரா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஆஷிஷ் தாஸ் இன்று அந்தக் கட்சியிலிருந்து விலிகினார்.அதன் அடையாளமாக இன்று கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள காளி கோவிலுக்குச் சென்ற அவர் அங்கே யாகம் வளர்த்து மொட்டையடித்துக் கொண்டார். மொட்டையடித்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இன்று நான் பாரதிய ஜனதாவிலிருந்து வெளியேறுகிறேன். இதுதொடர்பாக நான் திரிணாமூல் காங்கிரஸில் பேசிவிட்டேன். அந்தக் கட்சியில் இணைய இருக்கிறேன். எதிர்வரும் காலத்தில் என்னைப் போன்ற பல பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் சேருவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tripura BJP MLA Ashish Das performs havan & tonsures head at Kalighat Kali Temple in Kolkata
— ANI (@ANI) October 5, 2021
"I'm quitting BJP today. I had talks with TMC. More BJP MLAs may leave the party in coming days," says Ashish Das pic.twitter.com/ZSY9DbrX7N
முன்னதாக, பாரதிய ஜனதாவுக்கு திரிணாமூல் காங்கிரஸுக்கும் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்னை மாநிலம் விட்டு மாநிலம் கடந்து திரிபுரா வரைத் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 77 தொகுதிகளில் வென்றது. அந்தத் தேர்தலின்போது முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெல்லுங்கள் என பாஜக மம்தா பானர்ஜிக்கு சவால்விடுத்தது. இதனையடுத்து சவாலை ஏற்றுக்கொண்டு மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
சுவேந்து அதிகாரி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மம்தாவின் வலதுகரமாக இருந்தவர். ஆனால் தேர்தலுக்கு முன்பு வியூகம் வகித்து சுவேந்து அதிகாரியைத் தன்வசம் இழுத்துக் கொண்டது பாஜக. 213 தொகுதிகளில் வென்று நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியடைந்ததை பாஜகவினர் கிண்டலடித்து வந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் மம்தா பானர்ஜி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தேர்தலில் தோல்வி அடைந்ததால் 6 மாதத்துக்குள் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால்தான் மம்தாவால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.இந்த சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவானிப்பூர் தொகுதியின் எம்எல்ஏ சோபன்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில்தான் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பாக ப்ரியங்கா டிப்ரேவால் போட்டியிட்டார். கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 57 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் 84,512 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்காவைவிட 58,832 வாக்குகளைக் கூடுதலாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பாக போட்டியிட்ட ப்ரியங்கா டிப்ரேவால் 25680 வாக்குகளைப் பெற்றார்.
2011ம் ஆண்டு இதே பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
முன்னதாக பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுவதால், அவருக்கு எதிராக வேட்பாளர் யாரையும் நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)