மேலும் அறிய

Annamalai Slams EV Velu: "வீண் பீதி வேண்டாம் அண்ணா.. கேஸ் தட்டுப்பாடு இல்லை.. எ,வ வேலுவுக்கு அண்ணாமலை அட்வைஸ்

பொதுமக்களிடையே வீண் பீதியை ஏற்படுத்துவதை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அட்வைஸ் செய்துள்ளார். 

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று முதல்வர் கூறிக் கொண்டிருக்கையில், அவரது அமைச்சரவையில் இருந்து கொண்டு, தனது பிறந்த நாள் விளம்பரத்துக்காக, பொதுமக்களிடையே வீண் பீதியை ஏற்படுத்துவதை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அட்வைஸ் செய்துள்ளார். 

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் “கடந்த ஆண்டு வரை, தனது பிறந்தநாளுக்கு, சமூக வலைத்தளங்களில் தானே போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்தான் திமுக அமைச்சர் அண்ணன் திரு. வேலு அவர்கள். இந்த ஆண்டு புது அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு தனது பிறந்தநாளை, மக்கள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அவரது சொந்தக் கட்சிக்காரர்கள் கூட, அவரது பிறந்த நாளை மறந்து போய் விடுவதால், அவர்களுக்கு அதனை நினைவுபடுத்த, விதவிதமான ராஜதந்திரங்களைப் பயன்படுத்துவார். அதில் ஒன்றுதான் இது. 

சமையல் எரிவாயு இறக்குமதி அதிகம்

நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள் கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. 

மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் பாதிக்கப்படும்போது, அதன் விளைவு அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கும். ஆனால், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  அவர்கள் அரசு, அதற்கான தீர்வை ஏற்கனவே நடைமுறைப்படுத்திவிட்டார்கள்.

வீண் பீதி:

ஒருபுறம், முதலமைச்சர் முக ஸ்டாலின் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று கூறிக் கொண்டிருக்கையில், அவரது அமைச்சரவையில் இருந்து கொண்டு, தனது பிறந்த நாள் விளம்பரத்துக்காக, பொதுமக்களிடையே வீண் பீதியை ஏற்படுத்துவதை அண்ணன் திரு. வேலு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதுவுமே தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்ததைப் போல, கிரிக்கெட்டில் எத்தனை கோல் அடித்தார்கள் என்ற திமுகவினரின் வழக்கத்தை, இது போன்ற தருணங்களில் காட்டுவது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget