மேலும் அறிய

Congress Protest: திமுகவை விமர்சித்துவிடுவார்கள் என்பதால் தான் வாயில் துணியா? காங்., ஆர்பாட்டத்தில் கலகல கமெண்ட்!

Congress Protest: இது கலகலப்பான விசயம் என்றாலும், சமகால அரசியலோடு அது ஒத்துப்போவதால், கொஞ்சம் சிரிக்கவும், நிறைய சிந்திக்கவும் வைக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரில், பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த அவர், பலமுறை பரோலில் வந்தாலும், அவரை விடுதலை செய்ய, அவரது தாய் அற்புதம்மாள் நடத்திய போராட்டம், ஆண்டுகளை கடந்து நேற்று வெற்றி பெற்றது. ஒரு தரப்பினர் அதை கொண்டாடிய நிலையில், ஆளும் திமுக, ‛பேரறிவாளன் விடுதலையாக, தாங்கள் எடுத்த முயற்சி தான் காரணம்’ என்று அதற்கான உரிமையை கோரியது. 

அதிமுக தலைமையோ, ‛நாங்கள் போட்ட விதை தான், பேரறிவாளன் விடுதலையாக காரணம்’ என்று அறிக்கை விட்டது. இன்னும் பிறரும், ‛தங்களுக்கும் இதில் பங்கு உண்டு’ என்பதைப் போல், அறிக்கை விட்டனர். ஆனால், ஒரே ஒரு கட்சி மட்டும், இந்த விடுதலையை கடுமையாக எதிர்த்தது. அது காங்கிரஸ். தங்கள் கட்சியின் தலைவரை கொலை செய்த வழக்கில் கைதான ஒருவர் விடுதலையானதை, அக்கட்சி கடுமையாக சாடியது. 

அதுமட்டுமல்லாது.... நேற்று காங்கிரஸ் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில், பரபரப்பான அறிக்கை ஒன்றையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், 

‛‛முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.
கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை ? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன், ’’ என்று , காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 
 
பேரறிவாளன் வெளிவர நான் தான் காரணம் என்கிறது திமுக. அதே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அந்த வருகையை எதிர்க்கிறது. கடுமையாக சாடுகிறது. ஆனாலும், கூட்டணியாய் தொடர்கிறார்கள் என்று ஒரு புறம் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்க, நேற்று அறிவித்தபடி இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் ஆர்பாட்டமும் நடந்து முடிந்தது. ஆனால், அங்கு தான் ட்விஸ்ட். 
‛வாயில் துணியை கட்டி’ ஆர்பாட்டம் செய்ய காரணம் என பலருக்கும் கேள்வி இருக்க, காங்கிரஸ் தொண்டர் ஒருவரே அதற்கான பதிலை கூறி, கலகலப்பாக மாற்றியிருக்கிறார். என்னதான், இந்த விவகாரத்தை காங்கிரஸ் எதிர்த்தாலும், திமுகவை விடப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. எக்காரணம் கொண்டு, இந்த விவகாரத்தை வைத்து யாராவது திமுகவை சாடிவிடுவார்களோ என்கிற அச்சத்தில் தான், ‛வாயில் துணி’ கட்டும் போராட்டத்தை காங்கிரஸ் தலைவர் அறிவித்தார் என, அக்கட்சி நிர்வாகிகளே வெளிப்படையாக பதிவிட்டுள்ளனர். 

இது கலகலப்பான விசயம் என்றாலும், சமகால அரசியலோடு அது ஒத்துப்போவதால், கொஞ்சம் சிரிக்கவும், நிறைய சிந்திக்கவும் வைக்கிறது. ஒருவேளை அது உண்மையாக கூட இருக்கலாமோ என்றும் சந்தேகிக்க வைக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget