மேலும் அறிய
Advertisement
நாளை நடைபெறும் மனித சங்கிலி அறப்போர்... திருமாவளவன் அதிரடி கருத்து
50க்கும் மேற்பட்ட இயக்கங்கள் நாளை நடைபெறக்கூடிய மனித சங்கிலி அறப்போரில் கலந்து கொள்ள உள்ளனர் மாமல்லபுரத்தில் திருமாவளவன் பேட்டி
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டத்தில் உயிரிழந்த ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேற்கண்ட கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூண் பகுதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் தொண்டர்கள் இடையே பேசினார்.
மண்ணுரிமைப் போராளிகள் ஜான்தாமஸ் ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளான இன்று செங்கல்பட்டு காரணையில் விசிக கட்டியெழுப்பியுள்ள நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினேன்! #மண்ணுரிமை_நாள் pic.twitter.com/pFGLco5xP9
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 10, 2022
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து திருவமாவளவன் கூறியதாவது: உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவுக்கு வீரவணக்கத்தை செலுத்துக்கிறோம். சமூக நீதிக்காக போராடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் இரங்கல் தெரிவி்க்கின்றோம்.
[#விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்களின் திருப்போரூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கொத்திமங்கலத்தில் கட்டப்பட்ட தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தேன். pic.twitter.com/V9OPMo13dn
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 10, 2022
சமூக நல்லிணக்கத்துக்காக மனித சங்கிலி அறப்போர், நாளை 500க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்கின்றனர். இந்த மனித சங்கிலியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். வலது சாரியினருக்கு இதுமிகப்பெரிய எச்சரிக்கையாக இருக்கும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion