செங்கோட்டையன் விளக்கம்...சபாநாயகரை சந்தித்தது ஏன்?
Sengottaiyan-EPS: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், சபாநாயகரை சந்தித்தது குறித்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

எனது தொகுதி சார்ந்த கோரிக்கைக்காக சபாநயகரை சந்தித்தேன். சட்டப்பேரவை உறுப்பினர் சபாநாயகரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்-ஐ சந்திக்காத செங்கோட்டையன்
பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை , அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்திக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்பட்டு வருகிறது. இன்றும் சந்திக்காமல் சென்றதார் செங்கோட்டையன்.
இந்நிலையில், ஏன் செங்கோட்டையன் சந்திக்கவில்லை என இபிஎஸ்-யிடம், கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு அவரிடமே கேளுங்கள் என பதிலளித்தார்.
இதுகுறித்து, செங்கோட்டையனிடம், ஏன் இபிஎஸ்-யை சந்திக்கவில்லை , உங்களுக்குள் ஏதேனும் பிரச்னையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செங்கோட்டையன் விளக்கம்:
அதற்கு, சபாநாயகரை சந்திக்க சென்றேன். எனது தொகுதி சார்ந்த கோரிக்கைக்காக சபாநயகரை சந்தித்தேன். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கமான நிகழ்வுதான். சுற்றுசூழல் தொடர்பாக , கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான கடித்தத்தை சபாநாயகர் அப்பாவிடம் வழங்கினேன் என செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அதிமுகவில் இபிஎஸ்-க்கு எதிராக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மூத்த தலைவர் செங்கோட்டையனின் செயல்பாடுகளும், அதுபோலத்தான் இருப்பதாக பார்க்க முடிகிறது.
அதிமுக உட்கட்சி பூசல்:
அதிமுக கட்சியில் ஓபிஎஸ் , சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள், எடப்பாடி பழனிசாமியால் விலக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட வரும் நிலையில், கட்சிக்குள்ளே சலசலப்பானது தொடர்ந்து நிலவி வருகிறது.
மேலும், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்தால்தான், அதிமுக வெற்றி வாய்ப்பை எட்டும் என மூத்த தலைவர்கள் பலர், இபிஎஸ்-யிடம் தெரிவித்ததாகவும் ஆனால், அதற்கு எடப்பாடி பழசாமி மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், அதிமுக வலுவிழந்து வருகிறதே என்ற கவலையில், இபிஎஸ் மீது மூத்த தலைவர்களான செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இபிஎஸ்-ஐ தவிர்க்கும் செங்கோட்டையன்:
இந்நிலயில்தான் சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது.இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் புறக்கணித்தார். இது, பெரிதும் சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்தித்து பேசவில்லை.
இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் இபிஎஸ்-ஐ செங்கோட்டையன் சந்திக்கவில்லை. மேலும்,அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அப்பாவு அறைக்குச் சென்றார்.
அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோதே, அதிமுகவில் இருந்து வருவபவர் செங்கோட்டையன். மேலும், இபிஎஸ்க்கும் மூத்த உறுப்பினாராக பார்க்கப்படும் செங்கோட்டையன், இபிஎஸ்-க்கு எதிராக அவரது செயல்பாடுகள் , அதிமுக கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாமல், இபிஎஸ்க்கும் கடும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாகவே பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

