Vijay Sangeetha Divorce: "இந்த கோர்ட்டுக்கு வராதீங்க!" - விஜய் விவாகரத்து வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி! நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: "விஜய் சங்கீதா விவாகரத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் என்ன நடந்தது, வழக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது."

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் பிரபல நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு தற்போது நீதிமன்ற படிக்கட்டுகளை எட்டியுள்ளது. கடந்த சில காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்தகட்ட விசாரணை
இந்த மனுவை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பினரின் நேரடி விளக்கமும் அவசியம் எனக் கருதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், அன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா, ஆகிய இருவரும் எவ்வித விலக்கும் இன்றி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய்யின், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த நீதிமன்ற உத்தரவு தற்போது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
முதலில் சங்கீதா தரப்பில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில், விவாகரத்து வேண்டும் என 24-02-2026 நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். சங்கீதாவின் மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படக்கூடாது.
நீங்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் சென்று விவாகரத்து வாங்கிக் கொள்ளுங்கள் என திருப்பி அனுப்பினார். இதன்பிறகு இந்த வழக்கு, தற்போது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, 20.04.2026 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் அந்த நடிகை?
இது தவெக தொண்டர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகளவு கொண்டவரான விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா குற்றம் சாட்டியுள்ள அந்த நடிகை மூன்று எழுத்து கொண்ட நடிகை என்று கூறப்படுகிறது.
காதல் நாயகனாக திரையில் உலா வந்த விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படத்தில் முதன்முறையாக அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் அந்த நடிகை. அதன்பிறகு விஜய்யுடன் இணைந்து அவர் அடுத்தடுத்த வருடங்களில் அவர் இணைந்து நடித்துள்ளார். அப்போது, விஜய்யுடன் அவர் நடித்த படங்களில் ஒரு படம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த சமயங்களிலே இவர்கள் இருவர் இடையேயும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், விஜய்யுடன் இணைந்து அவர் சுமார் 10 ஆண்டுகள் வரை இணைந்து நடிக்காமலே இருந்துள்ளார்.
வெளிநாட்டில் சுற்றினாரா விஜய்?
பின்னர், மீண்டும் விஜய்க்கும் அந்த நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதை அறிந்த சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியது. சங்கீதா பிரிந்து சென்ற பிறகே மீண்டும் விஜய் அந்த நடிகையுடன் நடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
சங்கீதா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் விஜய் அந்த நடிகையுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றியதாகவும், அந்த புகைப்படங்களை அந்த நடிகையே தனக்கு அனுப்பியதாகவும், பொருளாதார ரீதியாகவும் தனக்கு நெருக்கடி அளித்ததாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 12 பக்கங்கள் கொண்ட மனுவை சங்கீதா தாக்கல் செய்துள்ளார்.























