”முதல்வர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்” - சாமி தரிசனத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ பேட்டி
முதலமைச்சர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்பட்டுவருகிறார், பிரதமர் மோடி மதுரை வருவதை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேட்டி.
2022ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஒமிக்ரான், கொரோனோ தொற்று நீங்க வேண்டியும், கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.#Abpnadu | #செல்லூர்ராஜூ | #sellurraju | @SellurKRajuoffl #மீனாட்சியம்மன்கோயில் | #NewYear2022 pic.twitter.com/TAr5Hg82cv
— Arunchinna (@iamarunchinna) January 1, 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
— Arunchinna (@iamarunchinna) January 1, 2022
பிரதமர் மோடி மதுரை வருவதை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் - செல்லூர் ராஜூ@SellurKRajuoffl | #மீனாட்சியம்மன் #2022NewYear | #wishes | #Abpnadu