ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு இருக்கணும்- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
RSS Chief Mohan Bhagwat: இந்து சமூகத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அனைத்துப் பிரிவினருக்கும் சமமான மரியாதை கொடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்து சமூகத்தினர் சாதி வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அதற்கு அனைவரும் "ஒரு கோயில், ஒரு கிணறு மற்றும் ஒரு சுடுகாடு" என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் அனைத்து பிரிவினரிடையே நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு விஜயதசமி தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் பகுதிக்கு மோகன் பகவத் வருகை தந்தார். அப்போது, அவர் உரையாற்றுகையில், இந்து சமூகத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் சமமான மரியாதை கொடுக்க வேண்டும். இது நமது மதம், இது நமது கலாச்சாரம். அதிகாரம் பெற்ற சமூகத்தை மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்து ஒன்றாக அழைத்துச் செல்லும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.
Also Read: இண்டர்போலிடம் சென்ற வங்கதேச போலீஸ்: இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவை கைது செய்யுங்கள்!
நமது பண்டிகைகளானது, வெறும் பண்டிகைகள் மட்டுமல்ல, அவை சமூக ஒற்றுமைக்கான வாய்ப்புகளாக இருக்கின்றன. அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக விழாவைக் கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மதிப்புகள், மரபுகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு தன்னார்வலர்களைக் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.
Video: கயிற்றை பிடித்து கிணற்றுக்குள் இறங்கும் பெண்கள்! உயிருக்கு ஆபத்துடன் தண்ணீர் எடுக்கும் நிலை!

