இண்டர்போலிடம் சென்ற வங்கதேச போலீஸ்: இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவை கைது செய்யுங்கள்!
Sheikh Hasina - Interpol: இந்தியாவில் இருக்கும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்யுமாரு இண்டர்போலிடம் சென்றுள்ளது வங்கதேசம் காவல்துறை.

வங்காள தேசத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்திய கடுமையான போராட்டத்தின் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, அன்றிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். இதையடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தற்போது, அந்நாட்டி தற்காலிக தலைவராக முகமது யூனுஸ் வகித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து படுகொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக பல உயர்மட்ட அவாமி லீக் தலைவர்களும் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.
Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?
இந்நிலையில் வங்காளதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் சாலைப் போக்குவரத்து மற்றும் பாலங்கள் துறை அமைச்சரும் அவாமி லீக் பொதுச் செயலாளருமான ஒபைதுல் குவாடர் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக 'சிவப்பு அறிவிப்பு' ( Red Notice ) பிறப்பிக்க கோரி தேசிய மத்திய பணியகம் (Bangladesh National Central Bureau) இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றங்கள், அரசு வழக்கறிஞர்கள் அல்லது விசாரணை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட மேல்முறையீடுகள் அடிப்படையில் NCB கிளை இன்டர்போலிடம் கோரிக்கைகளை வைத்துள்ளதாக காவல் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (AIG) எனாமுல் ஹக் சாகோர் உறுதிப்படுத்தியதாக யுனைடெட் நியூஸ் ஆஃப் பங்களாதேஷ் (UNB) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read: யுனெஸ்கோ பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்- பிரதமர் மோடி சொன்னது என்ன?
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், ஷேக் ஹசீனா மற்றும் தப்பியோடியவர்களாகக் கருதப்படுவர்களை மற்றவர்களைக் கைது செய்வதில் இன்டர்போலின் உதவியைப் பெறுமாறு, கடந்த ஆண்டு நவம்பரில் காவல் தலைமையகத்திடம் முறையாகக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வங்கதேச செய்தி நிறுவனம் டெய்லி ஸ்டார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதிமன்றங்கள், அரசு வழக்கறிஞர்கள் அல்லது புலனாய்வு அமைப்புகளின் மேல்முறையீடுகளின் அடிப்படையில், இண்டர்போலிடம் காவல்துறையினர் இத்தகைய கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
கடந்த நவம்பரில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், ஹசீனா மற்றும் தப்பியோடியவர்களாக வகைப்படுத்தப்பட்ட மற்றவர்களைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடுமாறு காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அரசின் ஆதரவுடன் இருப்பதாக கூறப்படும் , முன்னாள் பிரதமரை திருப்பி அனுப்புமாறு வங்க தேச தற்காலிக அரசு கூறி வரும் நிலையில், இந்தியா மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யுமாறு இண்டர்போலிடம் வங்கதேச காவல்துறை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

