PM modi: என்னிடம் சைக்கிள் கூட இல்லை; ராகுல் பிரதமராக பாகிஸ்தான் பிரார்த்திக்கிறது - மோடி
PM modi-Muslim Speech: இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்குக் கொடுக்க, இந்தியக் கூட்டணியினர் விரும்புகிறார்கள் என பிரதமர் மீண்டும் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு பிரார்த்தனை செய்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
”மோடி பிறப்பானது சும்மா இல்லை”
ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாள் தேர்தல் பரப்புரை பயணம் சென்ற பிரதமர் மோடி, மக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது பேசியதாவது, குஜராத் முதல்வராகவும், இந்தியாவின் பிரதமராகவும் இருந்துள்ளேன், அதற்கு காரணம் கடவுளின் அருளும், மக்களின் ஆசீர்வாதம்தான். மோடி பிறப்பானது சும்மா இல்லை, நோக்கம் உள்ளது.
காங்கிரசின் தலைவர்கள் ஊழல் மூலம் பெரும் சொத்துக்களை சேகரித்துள்ளனர். ஆனால் என்னிடம் சொந்தமாக ஒரு சைக்கிள் அல்லது வீடு கூட இல்லை.
பிரதமர் மோடிக்கு பரிசு வழங்கிய பாஜகவினர்
வாக்கின் பலத்தை பாருங்கள்:
வருங்கால சந்ததியினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் வளர்ந்த இந்தியாவை கொடுக்க விரும்புகிறேன். உங்களது ஒரு வாக்கின் பலத்தைப் பாருங்கள். முன்னதாக, நீங்கள் 500 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல தலைமுறைகள் கடந்துவிட்டன, ஆனால் அது நடக்கவில்லை. இப்போது உங்கள் வாக்கு மூலம் ராமர் கோவில் கட்டப்பட்டது. "சுதந்திரத்திற்குப் பிறகு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் அந்த ஒரு வாக்கின் சக்தியைப் பாருங்கள்; 370வது சட்டப்பிரிவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் உரையை ரசிக்கும் தொண்டர்கள்:
பாகிஸ்தானை உலுக்கிவிட்டது:
காங்கிரஸ் ஆட்சியின் போது ஜார்கண்ட், பீகார், ஒடிசா, ஆந்திரா மற்றும் பல மாநிலங்கள் நக்சல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த அரசானது, பாகிஸ்தானுக்கு கடிதங்களை அனுப்பியது, அதற்கு பதிலாக இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை அனுப்பியது. “உங்கள் வாக்குகள் மூலம் என்னை ஆட்சிக்குக் கொண்டுவந்தபோது, நான் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன், கடிதங்களை அனுப்பவில்லை, மாறாக எதிரிகளின் இடத்துக்கு நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் பாகிஸ்தானை உலுக்கிவிட்டது. ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்த மோடி, அண்டை நாடு அவரைப் பிரதமராக விரும்பலாம். ஆனால் இந்தியா, வலிமையான பிரதமரை கொண்ட வலிமையான நாட்டை விரும்புகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
”முஸ்லிம்களுக்கு கொடுக்க பார்க்கிறார்கள்”:
இந்திய கூட்டணியானது முட்டாள்களின் கூட்டமாக உள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் எஸ்டி/எஸ்சி மற்றும் ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என பொய்களை பரப்பி வருகின்றனர். ஆனால், உங்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்குக் கொடுக்க, இந்தியக் கூட்டணியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் நான் இருக்கும் வரை அதை நடக்க விடமாட்டேன் என மோடி தெரிவித்தார்.